நூல்கோல் நூதனம்.. அட, நூக்கலில் இத்தனை விசேஷமா? தாய்மார்களின் வரப்பிரசாதம்.. ஆயுசை கூட்டும் நூற்கோல்
சென்னை: நூல்கோலில் ஒருவித நாற்றம் வருவதாலேயே, சிலர் இந்த காயை சமைக்காமல் தவிர்த்துவிடுவார்கள்.. ஆனால், நம்முடைய உடலில் வேர்வையால் ஏற்படும் நாற்றத்தை தவிர்ப்பதற்கு, உதவுவதே இந்த நூல்கோல்தான் என்பது ஆச்சரியமான உண்மை. அப்படியென்ன நன்மைகளை இந்த நூல்கோல் தருகிறது தெரியுமா?
நூல்கோல், நூக்கல், நூற்கோல் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த காயில், A,E,C, வைட்டமின், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன், நிறைந்திருக்கின்றன.

நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் மிகுந்த இந்த நூல்கோலில் கலோரிகள் என்பதால் உடல் எடை குறைய பயன்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து, உடல் கழிவுகளை வெளியேற்றி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்கிறது இந்த காய். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, பித்தநீரையும் உறிஞ்சி, வயிறு பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது இந்த நூல்கோல்.
சிவப்பணுக்கள்: வாதம், கீல்வாதம், எலும்புகள் பிரச்சனைகள் உடையவர்களுக்கு நூல்கோல் சிறந்த உணவாகிறது.. சர்க்கரை நோயாளிகள், நூக்கல் சாறு 45 மி.கிராம் சாப்பிட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை பெருக்குகிறது. வைட்டமின் A நிறைந்த இந்த நூக்கல், நுரையீரலில் சளி உள்ளிட்ட சுவாச கோளாறுகள் இருந்தாலும், அதனையும் தீர்க்கிறது.
நூல்கோல் இலைகளில் ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால், இதயத்தை சீராக செயல்படவைத்து, பெருங்குடலையும் காக்க செய்கிறது. நூக்கலின் வேர்கள், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
அதுமட்டுமல்ல, புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுப்பதுடன், அவற்றை எதிர்த்து போராடவும் செய்கின்ற நுண்ணூட்ட சத்துக்கள் இந்த நூக்கலில் உண்டு.
பிஞ்சு காய்கள்: நூக்கலின் பிஞ்சு காய்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சமைத்து சாப்பிடும்போது தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அத்துடன், நரம்பு தளர்ச்சி பாதிப்பை குறைத்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்கிறது. நூல்கோல்களின் சாறுகள், பாத வெடிப்புகளுக்கு மருந்தாகின்றன..
இந்த நூல்கோல் இலைகளில் ஜூஸ் தயாரித்து குடிப்பது போல, இந்த நூல்கோலில் சத்தான சூப் செய்து குடிக்கலாம்.. நூல்கோல் காயை சீவி, பொடியாக நறுக்கிகொள்ள வேண்டும்.
சத்தான சூப்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு சேர்த்து அதில் இந்த காயை கொட்டி அரை வேக்காடு வேக விடவேண்டும். பிறகு, வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும். மிக்சியில் இதை அரைத்து எடுத்து, அதனுடன் தண்ணீர் விட்டு கலக்கி மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டும். லேசாக கொதி வந்ததும், சோளமாவு கரைத்து ஊற்றி இறக்கிவிடலாம். கடைசியில், கொத்தமல்லி, மிளகு தூள் தூவினால் நூக்கல் சூப் ரெடி.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications