இரவில் வியர்க்குதா? நைட்டில் வியர்த்தால் உஷாரா இருங்க.. இரவு அதிகம் வியர்ப்பதை தடுக்க உதவும் "பீன்ஸ்"
சென்னை: பகல் நேரத்தைவிட, இரவில் வியர்த்து கொட்டினால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். வியர்ப்பதை அலட்சியப்படுத்தவே கூடாது.
வழக்கமாக கோடை காலத்தில் இரவில் வெப்பம் அதிகமாக இருக்கும்.. சரியான காற்றோட்ட வசதி இல்லாவிட்டாலோ, அல்லது போர்வையால் முகத்தை மூடி படுத்திருந்தாலோ அல்லது இறுக்கமான ஆடைகளை அணிந்திருந்தாலோ அல்லது மது அருந்திவிட்டு படுத்தாலோ அல்லது கவலைகள், மன அழுத்தம் அதிகமானாலோ அளவுக்கு அதிகமாக வியர்க்கலாம்.

ஆனால், இவைகள் எதுவுமே இல்லாமல், நல்ல காற்று வசதி இருந்தும்கூட, ஒருவருக்கு அதிகமாக வியர்த்தால் அது பிரச்சனைக்குரிய விஷயமாகும்..
இரவில் வியர்க்க எத்தனையோ காரணங்கள் உள்ளன.. பெண்களுக்கு இரவு நேரத்தில் அதிகமாக வியர்த்துகொட்டினால், அவர்கள் மெனோபாஸ் நிலையை எட்டிவிட்டார்கள் என்றே அர்த்தம்.. இதுபோன்ற நேரங்களில் பெண்களுக்கு உடலில் அதிக உஷ்ணம் ஏற்பட்டு, வியர்க்குமாம்.. ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவதால், இப்படியான அறிகுறி தெரியலாம் என்கிறார்கள்.
எனினும் வாழ்வியல் மாற்றங்களின் மூலமாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். மிக குளிர்ச்சியான அறையில் உறங்கலாம் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை தவிர்க்கலாம்.
தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாவிட்டாலும், இப்படி அதிகப்படியான வியர்வை வரலாம்.. வழக்குக்கு மாறாக உடலில் வெப்பநிலை அதிகரிக்கும். இதய துடிப்பும் வேகம் எடுத்து, கைகள் நடுங்கிவிடும்.. நிறைய பசியும், தாகமும் எடுக்கும். இந்த அறிகுறிகளில் எது தெரிந்தாலும் தைராய்டு சுரப்பியின் முறையற்ற செயல்பாடாக இருக்கலாம்.
நீரிழிவு நோயாளியாக இருந்தாலும், இந்த பிரச்சனை வரலாம்,, தூங்கி கொண்டிருக்கும்போதே குளுக்கோஸ் அளவு திடீரென்று குறைந்துவிடக்கூடும்.. பகலில் நிறைய வேலை பார்த்தாலோ, கடுமையான உடற்பயிற்சி செய்தாலோ, இரவில் தாமதமாக சாப்பிட்டாலோ இப்படி வரலாம்.. இதற்கெல்லாம் ஒரே வழி சர்க்கரையை கட்டுப்படுத்துவதுதான்.. எனவே, சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்கினாலே இந்த பிரச்சனை வராது.
சுவாச கோளாறு இருந்தாலும் இரவில் வியர்வை அதிகமாகும்.. மூக்கு முட்ட சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், தக்காளி கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
காசநோய், நோயெதிர்ப்பு குறைபாடு, HIV வைரஸ், இதய வால்வு தொற்று, எலும்புதொற்று இப்படி உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகள் இரவில் வியர்வையுடன் தொடர்புடையவை என்கிறார்கள்.
எனவே, இரவில் சாதாரணமாக வியர்க்கிறது என்றால், அதை உணவு முறை மூலமே குணப்படுத்தலாம்.. அதாவது, மக்னீசியம் சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரவுநேரத்தில் வியர்வை குறையும்..
மருத்துவ ஆலோசனை: விதைகள், தானியங்கள், நட்ஸ், பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தாலும், பெண்களுக்கான மெக்னீசியம் சத்துக்கள் எளிதாக கிடைக்கும்.. பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம், உருளைகிழங்கு, சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வந்தாலும் இதற்கு தீர்வு உண்டு.. அதைவிட முக்கியமாக, காஃபின், ஆல்கஹால் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.. ஆனால், வழக்கத்துக்கு மாறாக வியர்வைகள் அதிகமாக இருந்தால் உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications