ஊற வைத்த கம்பு.. குண்டா இருக்கிறவங்களை குச்சி போல மாத்திடும் சூப்பர் தானியம்.. சத்துக்கள் ஆயிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுதானியங்கள் பயன்பாடு சமீபகாலமாகத்தான் அதிகரித்து வருகிறது. ஆனால், அன்றைய காலங்களில் இந்த சிறுதானியங்கள்தான் நம் முன்னோரை நீண்ட காலம் வாழச்செய்தது.. இன்று மீண்டும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் பெருகி வருகிறது.. இதற்கு காரணம், சிறுதானியங்களில் உள்ள சத்துக்களும் வைட்டமின்களும் ஏராளமான பயன்களை கொண்டவை. அந்தவகையில், கம்பு தானியத்தை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, B காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் அடங்கிய தானியம்தான் கம்பு.. அதாவது, வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து, இந்த கம்பில் இருக்கிறதாம்..

Eating soaked kambu regularly is the Best Food for all Health Benefits of soaked pearl millet Medicine for burning bad cholesterol

உடல் எடை குறையும்

அதிக நார்ச்சத்தும், குறைவான கொழுப்புச்சத்தும் உள்ளதால், உடல் எடை குறைப்போருக்கு பெஸ்ட் சாய்ஸாக கம்பு உள்ளது.
கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை என பலவகைகளில் செய்யலாம்.

இதில், கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வரும்போது உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைகின்றன.. தசைகளுக்கும் இறுக்கத்தை தருகிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் கம்பங்கூழ் குடிப்பதைவிட, களி அல்லது தோசை செய்து சாப்பிடலாம்.. இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.. உடலுக்கும் வலு கிடைக்கும்.. அதிக நார்ச்சத்தும், குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் சர்க்கரைநோய் ஏற்படாமல் காக்க உதவும்.

பெண்களுக்கு கம்பு நல்லது

தொடர்ந்து கம்பு சாப்பிட்டு வரும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.. நார்ச்சத்து அதிகம் என்பதால், அஜீரணம், மலச்சிக்கல் தீர்ந்து குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் கம்பு சாப்பிட்டு வரும்போது, வயிற்றில் புண்கள் ஆறிவிடும்.. இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், பெண்கள் கம்பு தானியத்தை தவறவிடக்கூடாது.

அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது அல்லது ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கம்பு உணவு கை கொடுத்து உதவும்.. அடிவயிற்று வலிக்கு, கம்பங்கூழ் சிறந்த நிவாரணமாகும். புரோட்டீன் நிறைந்த கம்பு, தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் சத்துக்கள் இதில் நிறைந்துள்தளால், உயர் ரத்த அழுத்தம் பிரச்சினையும் வராமல் தடுக்கப்படுகின்றன.

ஊற வைத்த கம்பு

ஊற வைத்த கம்பை, இரட்டிப்பு பலனை தரக்கூடியது.. எனவே, சமைப்பதற்கு முன்பு 12 மணி நேரம் ஊறவைப்பது நல்லது.
இப்படி ஊறவைத்து பயன்படுத்தினால், கம்பு மென்மையாகும்.. அதிக நேரம் சமைக்க தேவையில்லை..

இந்த ஊற வைத்த கம்பு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தவை. ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. உடலில் கொழுப்பின் அளவையும் உறுதிப்படுத்துகிறது. குடல் ஆரோக்கியத்தை இந்த ஊறவைத்த கம்பு பாதுகாக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுவதற்கும் உதவுகிறது. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ரத்தத்தையும் தூய்மைப்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+