முருங்கைப்பூ.. இந்த பூவுக்குள் அதிசயம்.. தாம்பத்யம் தழைக்க + பாலியல் பிரச்சனை தீர.. இயற்கை "வயாக்ரா"

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கைப்பூவின் பயன்கள் பற்றி பரவலாக தெரிவதில்லை. அதனாலேயே முருங்கைப்பூ சமையல் செய்வது, அரிதாகிவிட்டது.. இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

முருங்கையில் வேர் முதல் இலை வரை அத்தனையும் மருத்துவம்தான்.. அதேசமயம், அதன் பூக்களை சிலர் அலட்சியமாக நினைத்து, கண்டுகொள்ளவில்லை.. சமைப்பதும் இல்லை. ஆண்களுக்கு, இயற்கை அளித்த வயாக்ராவாக இந்த முருங்கை பூக்கள் உள்ளன. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன பாருங்கள்.

Health Amazing Benefits of Drumstick Flowers and Do you know that Drumstick Flowers is beneficial for men

நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகள் முருங்கைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது இந்த பூ.. பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது.. குழந்தைகளின் நினைவாற்றலுக்கு, இந்த முருங்கைப்பூ பொரியல் செய்து தரலாம்.. அல்லது, முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, அத்துடன் பனங்கல்கண்டு கலந்து, தினமும் காலை, 2 வேளையும் குடித்து வந்தாலும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

கண்களுக்கு மிகவும் இந்த முருங்கை பூக்கள் முக்கியம். கண்களில் உள்ள எல்லா கோளாறுகளையும் சரிசெய்யக்கூடியது.. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும். அல்லது, இந்த பூவை, நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

பெண்களுக்கு நல்லது: நரம்புகள் செயலிழந்தால், அதை இந்த முருங்கை பூவில் தயாரிக்கப்படும் கஷாயம் சரி செய்கிறது.. பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் கோபம், எரிச்சல், தலைவலி, வயிற்றுவலியை இந்த கீரையின் கஷாயம் சரிசெய்கிறது..

இவை அனைத்தையும்விட, ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழக்கூடியதுதான் இந்த முருங்கைப்பூ.. தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாமல் இருப்போருக்கு, முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து, அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும் என்பார்கள்..

ஆண்மைக் கோளாறுகள்: அல்லது முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 48 நாள் சாப்பிட்டு வந்தாலும், ஆண்மைக்கோளாறுகள் நீங்குமாம். அல்லது முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சி குடித்து வந்தாலும் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பார்கள்.

அதேபோல, பாதாம் பிசினையும், பாதாம் பருப்பையும் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பாதாம் பிசின் மறுநாள் காலை நுங்கு போன்று ஊறி வளர்ந்திருக்கும். அதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, ஊறவைத்த பாதாம் பருப்பை தோல் உரித்து, அதனுடன் பத்து நிமிடம் ஊறவைத்த சாரப்பருப்பு, முருங்கைப்பூ சேர்த்து மைய அரைத்து ஒன்றரை டம்ளர் பாலில் கலக்க வேண்டும். பிறகு, ஒரு டம்ளராக பால் வரும் வரை கொதிக்க வைத்து, அதில், பனங்கருப்பட்டி கலந்து குடித்துவந்தால் விந்தணுக்கள் கெட்டிப்படும் என்பார்கள்.

சிலர் இதை பொரியல் செய்வார்கள்.. ஒரு வாணலில் எண்ணெய், சின்ன வெங்காயம், கா.மிளகாய் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்த முருங்கைப்பூவையும் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்க வேண்டும். இதை சாப்பிட்டாலும் உடல் பலம்பெறும்.

முருங்கைக்கீரை: அல்லது, முருங்கைக் கீரை, முருங்கைப்பூ இரண்டையுமே சம அளவு எடுத்து நறுக்கி, எண்ணெயிட்டு வதக்கி வறுத்த வேர்க்கடலையை இடித்து போட்டு சுடசுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தாலும் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும் என்பார்கள்.

இதில் முருங்கைப்பூ சூப் செய்தும் குடிப்பார்கள்.. தனியா, சீரகம், மிளகு, சுக்கு, பூண்டு, எல்லாவற்றையும் அரைத்து வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வந்த விழுதை ஊற்றி, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். மசாலா வாசனை போனதும், பொடியாக நறுக்கிய முருங்கைப்பூக்களைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விட வேண்டும். பூ நன்றாக வேக வேண்டும். இதுதான் முருங்கை சூப்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+