திரிபலா சூரணம்.. பலபல பலனுள்ள திரிபலா மூலிகை.. ஆரோக்கியத்தின் காவலன்.. திரிபலாவை எப்படி சாப்பிடலாம்
சென்னை: சைனஸ் பிரச்சனைக்கும், உடல் எடை குறைப்பதிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கும் திரிபலா சூரணம் பற்றி தெரியுமா? இந்த சூரணத்தை அனைவருமே எடுத்து கொள்ளலாமா? எவ்வளவு சாப்பிடலாம்? இதன் மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மூலிகைதான் திரிபலா சூரணம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என்ற இந்த 3 வகையான மூலிகைகளின் கலவைப்பொடியே திரிபலா சூரணமாகும்.

திரிபலாவின் பிளஸ் பாயிண்ட்டே, இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்தான்.. முதுமையை தாமதப்படுத்தி இளமையை தாங்கி பிடிக்கும் இந்த திரிபலா. புற்றுநோய் செல்களை நெருங்கவிடாமல் தடுத்துவிடும் அளவுக்கு தன்மை கொண்டவை. உடலிலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றக்கூடிய சக்தி இந்த திரிபலாவுக்கு உள்ளது.. எனவே, இரவில் இந்த சூரணத்தை சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள மொத்த கழிவுப்பொருட்கள், நச்சுப்பொருட்கள் வெளியேறிவிடும்.
திரிபலா சூரணம்: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தவிருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் நீங்கும்..
நீரிழிவு நோயாளிகளும் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.. திரிபலாவிலுள்ள கசப்பு குணமானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்து, கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. திரிபலாவை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை..
உடல் எடை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், 2 கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை, 2 டம்ளர் நீரை, ஒரு டம்பர் வரும்வரை சுண்டகாய்ச்சி குடித்தாலே, உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய துவங்கும், தேவையற்ற கிருமிகளும் வெளியேறி, உடல் எடை குறைய துவங்கும்.. அதிக உதிரப்போக்கு உள்ள பெண்கள், இந்த பொடியை பயன்படுத்தலாம்.
சருமத்தின் காவலனாக இந்த சூரணம் உதவுகிறது.. சைனஸ் பிரச்சினை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.. அதனால்தான், திரிபலாவின் தேவை குளிர்காலங்களில் சற்று அதிகமாகவே இருக்கும். திரிபலா சூரணத்தை பல்பொடி போல பயன்படுத்துவதால், வாய் சுகாதாரம் பேணப்படும்.
டாக்டர் அட்வைஸ்: ஆனால், இந்த சூரணத்தை அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. வயதுக்கேற்ப திரிபலா பொடியை நெய், பால், தேன், வெந்நீர் போன்றவற்றில் கலந்து எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், தினமும் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இந்த சூரணத்தின் அளவும் மிகமிக முக்கியம். அதேபோல, குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த சூரணத்தை சாப்பிட வேண்டும்.
இந்த சூரணம் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து என்றாலும், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், உள்ளிட்டோர் டாக்டர்களின் ஆலோசனையை பெறாமல் இந்த திரிபலா சூரணத்தை சாப்பிடக்கூடாது.
அளவு எவ்வளவு: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த திரிபலா சூரணத்துக்கும் உள்ளது.. எனவே அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications