கொள்ளு பயிறு பயன்கள்.. கல்லீரல், கிட்னியை காக்கும் ஊறவைத்த கொள்ளு.. அதிக கொள்ளு தரும் பக்கவிளைவுகள்
சென்னை: கொள்ளு விதைகள் உடல் எடை குறைப்பதற்காகவே உதவுவதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. உடல் இளைப்பதற்கு மட்டுமல்லாமல், வேறு பல நன்மைகளையும் கொள்ளு தருகிறது. அது என்னென்ன? கொள்ளு பயறில் உள்ள நன்மைகள் என்னென்ன? பெண்களுக்கு கொள்ளு எந்த வகையில் உதவுகிறது? ஊற வைத்த கொள்ளுவின் முக்கியத்துவம் என்னென்ன?
வெறுமனே கொள்ளை ஊற வைத்து, அந்த தண்ணீரை மட்டுமே குடித்தாலே உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறும். இதே நீரை கொதிக்க வைத்து சூடாக குடித்தால் சளி, ஜலதோஷம் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும், இந்த கொள்ளுநீர் சரிசெய்துவிடும்.

மூலநோய் - ஆஸ்துமா
மூல நோய்கள் உள்ளவர்கள் கொள்ளுவை தாராளமாக சாப்பிடலாம். இதனால் வயிற்றுப்புண்ணும் ஆறுகின்றன. சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றக்கூடிய சேர்மங்கள் கொள்ளு பயரில் உள்ளது. கொள்ளுவை உணவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு மஞ்சள் காமாலை நெருங்குவதில்லை.
கொழுப்பை எரிக்கக்கூடிய சக்தி கொள்ளுவில் நிறைய உள்ளது. அதனால்தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழியே வந்தது.. சர்க்கரையை கட்டுப்படுத்துவதால், ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், கொள்ளுவை மிளகு சேர்ந்து கொதிக்க வைத்து குடிக்கலாம். முளைக்கட்டி கொள்ளுவை எந்த ரூபத்தில் சமைத்தாலும், அது பலமடங்கு நன்மை தரக்கூடியது.. கொள்ளு பருப்பை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும்போது பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் - பிசிஓடி
நீரிழிவு நோயாளிகள் கொள்ளு தவறாமல் சாப்பிடலாம். பொதுவாக, கசப்பும், துவர்ப்பும்தான் அதிக மருத்துவ குணங்கள் கொண்டவை என்பார்கள். அந்தவகையில், துவர்ப்பு சுவையை கொண்டதுதான் இந்த கொள்ளு. ரத்த சர்க்கரையை குறைப்பதாக இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டறிந்துள்ளார்களாம்.
சீரற்ற மாதவிடாய் சீராகும். பெண்களுக்கு இருக்கும் பிசிஓடி பிரச்சனை, வெள்ளைப்படுதல் பிரச்சனைகளும் சரியாகும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொள்ளுவில் குழம்பு வைத்து தருவார்கள்.. காரணம், பிரசவ அழுக்கை கொள்ளு வெளியேற்றிவிடுமாம். கொள்ளுவிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அமினோ அமிலங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன், நரம்புத் தளர்ச்சியையும் போக்குகிறது.
கொள்ளுவில் பக்க விளைவுகள்
ஆனால், கொள்ளுவை அதிகமாக சாப்பிடும்போது சில பக்க விளைவு வரலாம். குறிப்பாக, கொள்ளுவில் உள்ள பைடிக் அமிலம் போன்ற ஆண்டி-நியூட்ரியண்ட்கள், சில தாதுக்களை உறிஞ்சுவதை தடுக்கலாம். அதனால்தான், கொள்ளுவை ஊறவைத்து, முளைக்கட்டி பயன்படுத்த சொலகிறார்கள்.. இதனால், பைடிக் அமிலத்தை ஏற்படுத்தும் பாதிப்பு குறைகிறது.
அதேபோல, கொள்ளுவில் ப்யூரின் நிறைந்திருப்பதால், யூரிக் அமிலம் அதிகரிக்க செய்யலாம். இதனால் கீல்வாதம், மூட்டுவலி போன்ற உபாதைகள் வரலாம். அதிக நார்ச்சத்து உணவு என்னபதால், வாயு, செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதேபோல, அதிகமாக கொள்ளு சாப்பிடும்போது, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications