கற்பூரவள்ளியில் ஒளிந்திருக்கும் ஆச்சரியம்! வாழைப்பழத்தால் உடம்பில் வெயிட் ஏறுமோ? இதை படிங்க புரியும்
சென்னை: வாழைப்பழங்கள் சாப்பிட்டு வந்தாலே உடலில் பல நோய்களை வருவதை தடுக்கலாம் என்கிறார்கள்.. அந்தவகையில் வாழைப்பழங்களில் எது பெஸ்ட் என்று தெரியுமா? வாழைப்பழம் சாப்பிட்டாலே உடலின் எடை அதிகரித்துவிடும் என்று சொல்வது உண்மையா? அளவுக்கு அதிகமான வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
திருமண வீடுகளிலும், வீட்டு விசேஷங்களிலும், சாப்பிட்டு முடித்ததுமே வாழைப்பழங்கள் தர என்ன காரணம் தெரியுமா? வாழைப்பழங்களில் 60 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளன.. இதன்காரணமாக, சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதாலேயே சாப்பிட்டு முடித்ததும், அதிலும் இரவு நேரம் உணவுக்கு பிறகு வாழைப்பழத்தை சாப்பிடும் பழக்கத்தை முன்னோர்கள் பழக்கப்படுத்தி வந்துள்ளனர்.

கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் வாழைப்பழத்தில் இருப்பதால் அனைவருக்கும் ஏற்ற பழமாக உள்ளது.
சராசரி மனிதனின் சக்திவாய்ந்த எலும்புகள், தசைகளை உற்பத்தி செய்வதற்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம், ஒரேயொரு வாழைப்பழத்தில் உள்ளது.
ரஸ்தாளி இப்படி சாப்பிடுங்க
இதில் ரஸ்தாளி பழத்தை பொறுத்தவரை, வளரும் குழந்தைகளுக்கேற்ற பழமாகும்.. ஆனால் இந்த பழத்தை மட்டும் சாப்பாடு சாப்பிட்டதுமே சாப்பிடக்கூடாது. காரணம் ஒருவிதமான மந்தத்தன்மையை தந்துவிடும்.. எனவே வளரும் குழந்தைகளுக்கு, அரை ரஸ்தாளியை தேனில் கலந்து தந்தால் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும்..
ரஸ்தாளியைவிட அதிகமான மருத்துவ குணம் கொண்டது பச்சை வாழைப்பழம்தான்.. இந்த பச்சை வாழைப்பழத்தை பொறுத்தவரை, 1 கிராம் பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரை சத்துக்களும் உள்ளன. அல்சர் புண்ணை ஆற்றி, பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையையும் பச்சை வாழைப்பழம் தீர்க்கிறது.
ரத்த அழுத்த நோயாளிகள்
உயர் ரத்த அழுத்த நோயாளிகள் இப்பழத்தை சாப்பிடுவதால்,ரத்த அழுத்தம் குறைவதுடன், ரத்த நாளங்களின் சுவர்களும் ஆரோக்கியமாகும். ஸ்டார்ச் சத்துக்கள் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, குறைந்த அளவு சாப்பிடலாம்.
பொட்டாசியம் நிறைந்த பச்சை வாழைப்பழம், இதயத்துக்கு நல்லது.. வைட்டமின் B6 உள்ளதால் ஆக்ஸிஜனேற்றத்திற்கும் உதவியாக உள்ளது.. ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கிறது. ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்றுகிறது. எனவே பச்சை வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
உடல் எடை குறைக்க உதவும்
அதேபோல, கற்பூரவள்ளி வாழையும் உடலுக்கு நன்மை தரக்கூடியது.. உடலின் எடை குறைப்பவர்களுக்கு கற்பூரவள்ளி கை கொடுக்கும் என்று மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது..
ஏனென்றால், கற்பூரவள்ளியில், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் B6, நார்ச்சத்துக்கள் உள்ளதால், உடல் எடையை குறைக்க துணைபுரிகின்றன.. குறிப்பாக, செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகின்றன..
மூளை வளர்ச்சிக்கு உதவும் பழம்
மங்கனீசு, மக்னீசியம், நிறைய உள்ளதால், எலும்புகளுக்கும் வலுவை கிடைக்க செய்கிறது.. அவசர சூழலில், காலை உணவை சாப்பிட முடியாதவர்கள், ஒரேயொரு கற்பூரவள்ளியை சாப்பிட்டாலே போதும், நாள் முழுவதும் ஆற்றலும், சுறுசுறுப்பும், சத்தும் கிடைக்கும்.
ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சருமத்தில் சொறி, சிரங்குகள், புண்களை விரைந்து ஆற்றுவதற்கும் கற்பூரவள்ளி பழமே போதுமானது.. தலைபாரம் இருந்தால் கற்பூரவள்ளி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். கண்களில் இருக்கும் சூட்டை தணிக்கக்கூடியது இப்பழம்.. மன அழுத்தத்தையும் நெருங்க விடாது. ஏழைகளும் வாங்கி சாப்பிடக்கூடிய, இயற்கை பொக்கிஷம்தான் இந்த கற்பூரவள்ளி வாழைப்பழம்..!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications