குறட்டை சத்தம் ஓவராக வருதா? அதென்ன குறட்டைப் பழம்.. இரவில் குறட்டையின்றி ஹாயாக தூங்க டிப்ஸ்
சென்னை: குறட்டையை அலட்சியமாக கடந்துவிட முடியாது.. இந்த குறட்டை ஏன் ஏற்படுகிறது? யார் யாருக்கெல்லாம் குறட்டை வரும்? குறட்டையை தடுக்க எளிய வைத்திய முறைகள் உள்ளனவா? குறட்டையை அஜாக்ரதையாக நினைத்துவிட்டால், விளைவுகள் என்னென்ன? குறட்டை பழம் என்றால் இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நாம் தூங்கும்போதுதான் தொண்டையிலுள்ள தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கும்போது, மூச்சு பாதையின் அளவு இயல்பாகவே குறுகலாகிவிடும். இந்த குறுகிய பாதையில் சுவாசக்காற்று செல்ல முற்படும்போது ஒருவித சத்தம் எழும்.. இதனைதான் குறட்டை என்கிறோம்.

யார் யாருக்கு குறட்டை வரும்?
பொதுவாக, தொப்பை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை வரும்., ஆஸ்துமா நோயாளிகள், சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குறட்டை வரக்கூடும்..
அதேபோல கொழுப்பு, சாப்பிட்டு தூங்குபவர்களுக்கும், தொண்டையில், மூக்கில் சதை வளர்ச்சி உள்ளவர்களுக்கும் குறட்டை வரும்.. மூக்கு இடைச்சுவர் வளைவு இருந்தால், சளியுடன் கூடிய மூக்கடைப்பு, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி இருந்தால், தைராய்டு, உடல் பருமன் இருந்தால் குறட்டை வரக்கூடும். சிகரெட் புகைப்பவர்கள், மது அருந்துபவர்கள், தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் குறட்டை வருவதுண்டு.
பாதிப்புகள் என்னென்ன
தூக்கமின்மை குறட்டை அபாயத்தை அதிகரிக்கலாம்... இதனால் தொண்டை தசைகளை தளர்த்துவதுடன், காற்றுப்பாதை அடைப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல குறட்டை விடுவது தூக்கமின்மை அபாயத்தை அதிகரிக்க செய்யலாம்.
இதய தசைகள் பலவீனமாவது, ஹார்ட் அட்டாக் வரை இந்த குறட்டை கொண்டுவந்துவிடும்.. எனவே, குறட்டை பாதிப்பு இருந்தால், இதயம், நுரையீரல், தொண்டை உள்ளிட்டவற்றை பரிசோதித்து கொள்வது நல்லது.
பயிற்சிகள்
குறட்டையை ஆரம்ப நிலையில் சுவாச பயிற்சி மூலம் சரிசெய்யலாம்.. மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து படுத்து தூங்குவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி ஒருபக்கமாக திரும்பி படுக்க வராவிட்டால், முதுகிற்கு பின்புறம் துணி அல்லது நீளமான தலையணையை வைத்து கொண்டு படுக்கலாம்.
ஓய்வே இல்லாமல் வேலை பார்த்துவிட்டு வந்து படுத்தாலும் குறட்டை வரும்.. படுக்கையறையில் தூசிகள் படிந்திருந்தால், அல்லது தலையணை, போர்வை அழுக்காக தூசிபடிந்திருந்தாலும் குறட்டை வரும்.
எளிய நிவாரணங்கள்
யூகலிப்டஸ் எண்ணெய்யை, சூடாக உள்ள தண்ணீரில் போட்டு ஆவி பிடிக்க குறட்டையில் இருந்து விடுபட முடியும். அல்லது ஏலக்காய் தூள் அரை ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வரலாம்.
அல்லது துளசி, புதினாவை சமமாக எடுத்து, தண்ணீரில் காய்ச்ச வேண்டும். அந்த தண்ணீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உறங்குவதற்கு முன்பாக குடித்து வந்தால் குறட்டையில் இருந்து விடுபடலாம். ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு, மன அழுத்தத்தையும் தவிர்த்து, தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தாலும் குறட்டையை குறைக்கலாம்.
சுவாச கோளாறுகள், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவுக்கு, இரவு படுக்கும் முன்பு, வெந்நீரில் மஞ்சள் தூளையும் கலந்து ஆவி பிடிக்கும்போது நிவாரணம் கிடைக்கும்.
விதவிதமான டீ
அல்லது சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் இந்த மூன்றையும் சமமாக தூள் செய்து, தினமும் 2 வேளை டீ தயாரித்து குடிக்கலாம். லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு இவைகளை வைத்தும் டீ தயாரித்து குடிக்கலாம்.
ஒரு கிளாஸ் நீரில், ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூளை கலந்து குடித்தாலும் குறட்டை குறையும்.. சுத்தமான நெய்யை லேசாக சூடாக்கி, மூக்கில் ஓரிரு துளி விட்டு, இரவு தூங்க சென்றால் குறட்டை குறைய துவங்கும். ஆலிவ் எண்ணெயில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும்.
குறட்டை பழம் எண்ணெய்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குறட்டை பழத்தின் எண்ணெய்யை பயன்படுத்தி குறட்டையை தடுக்கலாம்.. குறட்டைப் பழத்திலிருந்து ஒரு லிட்டர் சாறு, ஒரு லிட்டர் நல்லெண்ணெய், 20 கிராம் இடித்த மிளகு என மூன்றையும் ஒன்றாக காய்ச்சி, வடிகட்டினால் எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய்யை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்.
பிராணயாமம் போன்ற மூச்சு பயிற்சியும் குறட்டையை தவிர்க்க உதவும்.. எனினும், இவைகள் எல்லாம் தற்காலிக நிவாரணம்தானே தவிர, டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதே முறையான பாதுகாப்பாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications