மட்டன் குழம்பு வைக்கறீங்களா? அப்ப ஆட்டுக்கறியில் இதையும் சேர்த்து போடுங்க.. குடல் தொற்று ஓடிபோயிரும்
சென்னை: மட்டன் வாங்கினால் அதில் சிறிது ஆட்டுக்குடலையும் சேர்த்து வாங்க சொல்கிறார்கள்.. இந்த ஆட்டுக்குடல் தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஆட்டுக்கறியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. குறிப்பாக, வைட்டமின் B12 சத்துக்கள், நியூரான்கள் மற்றும் ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அத்துடன், வளர்சிதை மாற்றம், செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, தைராய்டு செயல்பாட்டைத் தூண்டுகிறது, நியாசின் உணவை ஆற்றலாக மாற்றவும் துணைபுரிகிறது.
உடலுக்கு பலம் தரக்கூடியது என்பதால், மாதம் ஒருமுறையாவது ஆட்டுக்கறியை குறிப்பிட்ட அளவு எடுத்து கொள்ள சொல்கிறார்கள்.. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் தவிர, ஆரோக்கியமாக உள்ளவர்களும், உடலுழைப்பு நிறைந்தவர்களும், மாதம் ஓரிருமுறை சாப்பிடலாம்.
உடல்சூடு: உடல் சூட்டை தணிக்கக்கூடியது ஆட்டுக்கறி, தோலுக்கு வலிமை தருகிறது.. கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது.. மட்டனில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளதால், மட்டனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மட்டனின் பாகங்களும் உடலுக்கு நன்மையை தருகின்றன. இதில், குடல் கறியை பற்றி பார்ப்போம்.
ஆட்டின் குடல் கறியை, "போட்டி" என்று சொல்வார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் போட்டியை சமைத்து சாப்பிடலாம்.. ஆட்டு குடலில், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் A, D, E, K போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன..
செரிமான ஆரோக்கியம்: புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின் B12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாக இந்த போட்டி உள்ளது.. எனவே, மியூசின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடல் தொடர்பான கோளாறுகளை போக்குவதற்கு இந்த ஆட்டுககுடல் உதவுகிறது. குடல்கறியில் துத்தநாகம் உள்ளதால், இதை சமைத்து சாப்பிடும்போது, நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலமும் பராமரிக்கப்படுகிறது..
இந்த குடலில் கறியானது, கோலினின் நல்ல மூலமாகும்.. இது மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை பராமரிக்க முக்கியமான ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஆட்டின் குடல்களில் கிரியேட்டின் நிறைந்துள்ளதால், இது தசை செயல்திறனை மேம்படுத்துவதற்கு பேருதவி புரிகிறது.
சிவப்பு இறைச்சி: ஆட்டுக்கறியின் குடல் உட்பட மற்ற பாகங்களில் எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. காரணம், சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.. சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்பதால், மட்டன் சாப்பிடும்போது மட்டும் அளவில் கவனம் தேவை என்கிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications