ஒல்லி ஒல்லியா உடம்பா? என்ன சாப்பிட்டாலும் சதை போடலியா? சூப்பர் எள் விதை பாருங்க! ஆரோக்கியம் பெருகும்
சென்னை: உடல் எடையை குறைக்க பலரும், பலவாறாக முயற்சித்து கொண்டிருந்தால், சிலர் உடல் எடை அதிகரிக்கும் முயற்சியிலும் இறங்கி வருகிறார்கள்.. என்ன சாப்பிட்டாலும், உடம்பில் எடை கூடவேயில்லையே? அப்ப இந்த குட்டி டிப்ஸ் பாருங்க.
உடல் எடை ஏறாமல், மெல்லிய தோற்றத்துடன் சிலர் காணப்படுவார்கள் இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.. சாப்பிடும் கலோரி அளவும், வெளியேற்றப்படும் கலோரியின் அளவும் சரியான விகிதத்தில் இல்லாமல் போனாலும் உடலின் எடை ஏறாது..

அதேபோல, போதுமான அளவு சாப்பிடாமல் இருந்தால், உடம்பில் வெயிட் போடாது.. தேர்ந்தெடுத்து சரியான உணவை சாப்பிடாமல் இருப்பதும், முறையற்ற உணவு பழக்கத்தினாலும், உடல் எடை கூடாமலேயே இருக்கலாம்.
உடல் பருமன்: உடல் பருமனானவர்கள் மட்டுமல்ல, உடல் எடை மெலிந்தவர்களும், தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. அப்போதுதான் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்ட முடியும்.
கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றாலும், இதிலும் கவனமாகவே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.. சத்து இல்லாத கலோரி, சத்து நிறைந்த கலோரி என்று கலோரிகளிலேயே 2 வகைகள் உள்ளன.. பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகள், கூல் டிரிங்க்ஸ்களில் நிறைய கலோரி இருந்தாலும், அதில் துளியும் பலனில்லை. எனவே, இயற்கையான முறையில், காய்கறிகள் மூலம் கிடைக்கும் கலோரிகளுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
உடல் எடை: உடலில் சதை அதிகரிக்க வேண்டுமானால், முதலில் ஆரோக்கியமில்லாத சாப்பாட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.. ஆரோக்கியமற்ற உணவுகள்தான் உடல் எடை கூடாததற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக, ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள் என உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் தவறாமல் கிடைக்க வேண்டும்..
உடல் எடை அதிகரிக்க, சாக்லேட், சீஸ் அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளே இதற்கு முதலில் தேவையாக உள்ளது.. ஓட்ஸ் மீல், தானியங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது..
மீன், முட்டைகள்: அதேபோல, உலர் திராட்சையில், இரும்பு சத்து நிறைய உள்ளன. மட்டன், சிக்கன், மீன், முட்டை, சோயா போன்றவற்றில் புரோட்டீன்கள் நிறைய உள்ளன. உருளைக்கிழங்கு போன்ற கிழங்குகளில் மாவுச்சத்துக்களும், கலோரிகளும் உள்ளன..
பழங்களில், சப்போட்டா, மாம்பழம், ஆப்பிள், திராட்சைகளையும், ப்ரோக்கோலி, கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளையும், கொண்டைக்கடலை போன்ற தானியங்களையும், பாதாம், பிஸ்தா பருப்புகளையும் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும்.
பசு நெய்: சுடச்சுட வடித்த சோறில், வேகவைத்த துவரம் பருப்பு, சிறிது பசுநெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டாலே எடை கூடுமாம்.. அல்லது இரவில் ஒரு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் பசும்பால் குடித்து வந்தாலும் உடல் எடை கூடுமாம்.
பருப்பு வகைகள், உலர்ந்த பழ வகைகள், பழங்கள், வறுத்த கடலை பருப்பு போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். அதேபோல பால் பொருட்கள், சோயா பொருட்களில் நிறைய கால்சியம், புரோட்டீன் உள்ளதால், எக்காரணம் கொண்டும் அதனை தவிர்த்துவிடக்கூடாது..அதேபோல, முட்டையின் மஞ்சள் கரு, கொழுப்புக்கறி, தேங்காய் எண்ணெய் போன்றவற்றிலும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது.
எள்ளு உருண்டை: இளைத்தவனுக்கு எள்ளு என்பார்கள்.. உடல் சதையை அதிகரிக்கக்கூடிய தன்மை, இந்த எள் விதைகளுக்கு உள்ளது.. எள்ளுச்சட்னி, எள்ளுத்துவையல், எள் உருண்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றையாவது சாப்பிட வேண்டும்.
இந்த எள்ளுவில் வெல்லம் கலந்து உருண்டை பிடித்து எள்ளுருண்டை சாப்பிடும்போது, சத்துக்கள் இரட்டிப்பாகிறது.. அதாவது, கருப்பு எள் விதைகளை கழுவி சுத்தம் செய்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, வெல்லத்தையும், ஏலக்காயையும், பொடி செய்து சேர்த்து, நெய் ஊற்றி சுடச்சுடச் உருண்டையாக பிடித்தால் எள் உருண்டை ரெடி. இதுபோலவே, வேர்க்கடலையிலும் இப்படி வெல்லம் சேர்த்து, வேர்க்கடலை உருண்டை செய்து சாப்பிடலாம்.
ராகி மால்ட்: வெல்லம் சேர்த்து கருப்பு உளுந்துவை சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லம் சேர்த்து அல்வா போல செய்து சாப்பிட்டாலும் உடலுக்கு வலு கிடைக்கும்.. ராகி மாவிலும், இப்படி வெல்லம் சேர்த்து, "ராகி மால்ட்" செய்து சாப்பிடலாம்.. அதாவது, ராகி மாவை சலித்து எடுத்து, அதனுடன் நாட்டுச்சர்க்கரை, பசும்பால், சிறிது நெய் சேர்த்து கஞ்சி போல காய்ச்சி குடித்து வந்தாலே உடல் எடை அதிகரித்துவிடும்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications