Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jobs: 1.50 லட்சம் பேருக்கு வேலை.. அமேசான் மெகா அறிவிப்பு.. பெண்கள் - மாற்றுத்திறனாளிகளுக்கும் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்து வரும் விழாக்காலத்தையொட்டி நாடு முழுவதும் அமேசான் நிறுவனத்தில் 1.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவை உள்பட தமிழகத்தின் பிற இடங்களிலும் பணியாற்றலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இ- காமர்ஸ், க்ளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மற்றும் ஏஐ உள்பட பல்வேறு பிரிவுகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று அடுத்தடுத்து விழா, பண்டிகைகள் வருகின்றன. இதையொட்டி அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள 1.50 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

amazon-hiring-for-1-5-lakh-seasonal-job-ahead-of-festive-season

தொடர்ந்து வரும் பண்டிகையையொட்டி அமேசான் நிறுவனத்தில் புதிதாக Seasonal Work வாய்ப்பு வழங்கபட்டு உள்ளது. தற்போது ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் முக்கிய நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி மும்பை, டெல்லி, புனே, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ, கொச்சி, கோவை, இந்தூர், ராய்ப்பூர் உள்பட பல இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த Seasonal Work என்பது Fulfilment Centres, Sort Centres, last mile delivery stations உள்ளிட்ட இடங்களில் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான ஆபரேஷன் பிரிவு அதிகாரி அபிநவ் சிங் கூறுகையில், ‛‛பண்டிகை காலத்தையொட்டி வேலைக்கு சேர்ந்தாலும் கூட அதன்பிறகும் வேலையாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
சீசனல் வொர்க்கிற்காக வருவோரில் கணிசமான பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அலுவலகத்தில் உள்ளே பணியாற்றுபவர்களாக இருந்தாலும் சரி, டெலிவரி செய்யும் பணியில் இருந்தாலும் சரி அவர்களின் பாதுகாப்பு நலவாழ்வுக்கு அமேசான் முக்கியத்துவம் கொடுக்கிறது'' என்று கூறியுள்ளார். அமேசான் சார்பில் பணியாளர்களுக்கு கண், பல் உள்பட பிற மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. தற்போது பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்து விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+