For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த டிகிரி படிச்சிருந்தாலும் ஓகே.. பாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

Google Oneindia Tamil News

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. . காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பயன்படுத்துங்கள்.

Announcement for 8500 Apprentice Vacancies in State Bank of India

வேலை தரும் நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

பணி: அப்ரெண்டீஸ்

காலியிடங்கள்: 8,500

தமிழகத்தில் காலியிடங்கள் 470

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.

தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020

மேலும் விரிவான விவரங்கள் அறிய பாரத ஸ்டேட் வங்கியில் இணைதளத்தை பாருங்கள்.

English summary
State Bank of India has announced 8500 Apprentice posts. It has been announced that graduate youth from across the country can apply. Only those from states where vacancies have been notified can apply for the respective positions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X