For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானப்படையில் இணைவது உங்கள் கனவா? உங்களுக்கான அரிய வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்..!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 19ம் தேதி வரை தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய படைபிரிவுகளில் ஒன்றான இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டீஸ் பணி இடங்களுக்கு ஏர்போர்ஸ் அப்ரண்டிஸ் பயிற்சி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.indianairforce.nic.in-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 Announcements have been issued to fill 80 Apprentice posts in the Indian Air Force

மெஷினிஸ்ட் பிரிவில் 04 இடங்கள், ஷிட் மெட்டல் பிரிவில் 07 இடங்கள், வெல்டர் கேஸ் & எலெக்ட் பிரிவில் 06 இடங்கள், மெக்கானிக் ரேடியோ ரேடார் விமானம் பிரிவில் 09 இடங்கள், தச்சர் பிரிவில் 03 இடங்கள், எலக்ட்ரீசியன் ஏர்கிராப்ட் பிரிவில் 14 இடங்கள் நிரப்படவுள்ளன. பெயிண்டர் ஜெனரல் பிரிவில் 01 இடங்கள், பிட்டர் பிரிவில் 26 இடங்கள் உள்ளிட்ட 80 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படவுள்ளதாக அந்த இணைய பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க நினைக்கும், விண்ணப்பதாரர்கள் 10வது அல்லது 12வது இடைநிலை வகுப்பு தேர்ச்சி மற்றும் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர, ஜடிஜ-யில் தேர்ச்சி மற்றும் 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும் வயது வரம்பாக 14 முதல் 21 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மாதம் 7700 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி

விருப்பமுள்ள விண்ணப்பதார்கள், ஆன்லைன் விண்ணப்பம் பெற www.apprenticeshipindia.gov.in என்ற வலைதளத்திற்கு சென்று வாய்ப்புகள் ("opportunities") என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதன்பின்பு மேற்கூறிய பதவிகளில் ஒன்றை விண்ணப்பிப்போர் தேர்வு செய்ய வேண்டும். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழி மட்டுமே ஏற்கப்படும். 01 ஏப்ரல் 2022 அன்று தொடங்கும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19, 2022. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.indianairforce.nic.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

English summary
Applications are invited from eligible applicants till February 19, following the announcement of the filling of 80 Apprentice posts in the Indian Air Force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X