வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. சென்னை ஐடி நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் Anthology ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஹைபிரிட் ரிமோட் ஆப்ஷனும் உள்ளதால் வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.
இப்போது பலரும் கல்லூரி படிப்பை முடித்து பணி தேடி கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஐடி துறையில் கால்பதிக்க பலரும் முயன்று வருகின்றனர். அந்த வகையில் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்வதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று அந்தோலாஜி (Anthology). இந்த நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் I பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு குறிப்பிட்ட பிரிவில் 0 - 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு ஃப்ரண்ட்எண்ட் டெவலப்மென்ட்டில் Angular/TypeScript உள்ளிட்டவற்றில் பணி அனுபம் கொண்டிருக்க வேண்டும். மேலும் டெவலப்பிங், பில்டிங், டெஸ்ட்டிங், டெப்ளாயிங் மற்றும் ஆபரேட்டிங் அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
Cloud டெக்னாலஜியில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். பேக்எண்ட் புரோகிராமிங் லேங்குவேஜ்களான ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், பைத்தான் உள்ளிட்ட பிறவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். AWS Cloud Technologies பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர ஃபங்ஷனல் புரோகிராமிங் லேங்குவேஜ் Haskell அல்லது Scala தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஹைபிரிட் ரிமோட் வகை பணியாகும். இதனால் வாரத்தில் சில நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தும் கூட பணியாற்றலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எது என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பணிக்கான அறிவிப்பு என்பது மே 6ம் தேதியே வெளியாகிவிட்டது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications