ஐடி துறையில் பணி.. சென்னை வேளச்சேரி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.. செம வாய்ப்பு
சென்னை: சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் பெசன்ட் டெக்னாலஜிஸ் எனும் ஆன்லைன் மற்றும் கிளாஸ்ரூம் சாப்ட்வேர் பயிற்சி மையம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
சென்னை வேளச்சேரியில் பெசன்ட் டெக்னாலஜிஸ் (Besant technologies) என்பது செயல்பட்டு வருகிறது. இது ஆன்லைன் மற்றும் கிளாஸ் ரூமில் அனைத்து வகையான சாப்ட்வேர் படிப்புகளையும் சொல்லி கொடுக்கிறது. சென்னை மட்டுமின்றி பெங்களூரிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் பெசன்ட் டெக்னாலஜிஸில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐடி துறையில் நிபுணத்துவம் பெற்றவரா நீங்கள்? டீச்சிங் துறையில் ஆர்வம் இருப்போரை அழைக்கிறது பெசன்ட் டெக்னாலஜிஸ். இந்த பணியை விரும்புவோர் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை கீழ்கண்ட டொமைனில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதன்படி ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் (ரியாக்ட்/ஆங்குலர், ஜாவா, பைத்தான். டாட் நெட், மைஎஸ்க்யூஎல்/எஸ்க்யூஎல்) ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
இதுதவிர சாப்ட்வேர் டெஸ்ட்டிங் (Manual, Selenium), கிளவுட் கம்ப்யூட்டிங் (ஏடபிள்யூஎஸ், DevOps, லினக்ஸ், சிசிஎன்ஏ), டேட்டா அனலிஸ்ட் (பைத்தான், Tableau, Power BI, Excel, SQL), டேட்டா சயின்ஸ் (பைத்தான், எஸ்க்யூஎல், பவர் பிஐ, Tableau, AI, ML) உள்ளிட்டவற்றில் ஸ்கில்ஸ் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள க்யூஆர் கோட்-டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு இண்டர்வியூ குறித்த பிற விவரங்கள் தெரிவிக்கப்படும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8925810743 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications