சம்பளம் + இன்சென்டிவ்.. கோவையில் ஐடி வேலை தயார்! Capgemini தரும் ஜாக்பாட்.. நாளை கடைசி நாள்
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் கேப்ஜெமினி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்ய மே 31 (நாளை) கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் இன்சென்டிவ்வுடன் மாதசம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கேப்ஜெமினி உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Contact Support Group (CSG) என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு 3 ஆண்டு டிகிரி/டிப்ளமோ படிப்பை 2024, 2025ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுது.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அடிப்படையான கம்ப்யூட்டிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். 24/7 என்ற அடிப்படையில் பணியாற்றவும், நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும்.
தற்போது கோவையில் நியமனம் செய்யப்பட்டாலும் கூட அதன்பிறகு பணி இடமாறுதல் செய்யப்பட்டால் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதோடு ஒரு முறை மட்டுமே இன்சென்டிவ்வாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் பணியில் சேர்வோருக்கு ரூ.3.25 லட்சம் வரை கிடைக்கும்.
விண்ணப்பம் செய்ய மே 31 (நாளை) கடைசி நாளாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்போரிடம் Digilocker அக்கவுண்ட் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட ஆக்டிவ் செல்போன் எண் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு Virtual முறையில் செலக்ட் செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications