Cognizant ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சென்னையிலும் பணி செய்ய வாய்ப்பு.. சூப்பர் சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன்(Cognizant Technology Solutions Corporation) செயல்பட்டு வருகிறது. காக்னிசண்ட் நிறுவனத்தை பொருத்தமட்டில் நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் தேவையான டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்த முழு விபரம் வருமாறு:
காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் எம்டிஎஸ் டெவலப்பர் (MTS Developerr) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எம்டிஎஸ் டெக்னிக்கல் ஸ்கில்ஸ் ஆக புரோகிராமிங் மற்றும் எம்டிஎஸ் காம்போனென்ட்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் லினக்ஸ், யுனிக்ஸ்/AIX பிளாட்பார்ம் - IV, யுனிக்ஸ் கமெண்ட்ஸ், Shell ஸ்கிரிப்டிங்கில் அனுபவம் இருக்க வேண்டும்.
அதேபோல் COBOL பற்றிய அறிவு இருக்க வேண்டும். ACI MTS டெவலப்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ENTIA,Oracle, DB2, IBM MQ உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோட, எம்டிஎஸ் புராசஸ், எம்டிஎஸ் லைன்ஸ், எம்டிஎஸ் க்யூஸ், ரிமோட் ரெக்கார்ட், எம்டிஎஸ் டேட்டாபேஸ் REL மற்றும் AUX உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இதுதவிர இன்னும் சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதுபற்றி கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். ஆகவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
மேலும் இது ஒரு PAN India பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் நம் நாட்டின் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் கூட பணியாற்ற வாய்ப்பு கிடைக்கலாம். இல்லாவிட்டால் நம் நாட்டின் எந்த நகரங்களில் வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications