சென்னை - கோவையில் ஐடி வேலை.. காக்னிசண்ட் நிறுவனம் முக்கிய அறிவிப்பு! ரூ.6.75 லட்சம் வரை சம்பளம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகாக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 7 ம் தேதி கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) சார்பில் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் என்பது நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காக்னிசண்ட் சார்பில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு: அதன்படி தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் கிராசூவேட்களுக்கான GenC Next, GenC and Gen C பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2024ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. மற்றவர்கள் என்றால் 60 சதவீத மதிப்பெண்ணுடன் 10, பிளஸ் 2, டிப்ளமோ, யுஜி, பிஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்தவர்களுக்கும், அரியர்ஸ் இருப்பவர்களுக்கும் அனுமதியில்லை.
இந்த பணிக்கு Cognizant இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய மார்ச் 7 ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்வது நல்லது. அதோடு விண்ணப்பத்தாரர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அங்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கான விபரங்கள் அனைத்தும் Superset-ல் பதிவு செய்யப்படும் இ-மெயில் ஐடி மூலம் தான் தெரிவிக்கப்படும்
இதனால் சொந்த மெயில் ஐடியை வழங்க வேண்டும். ஒருமுறை இ-மெயில் முகவரி கொடுத்த பிறகு அதனை மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமாக சரியான இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 9 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், இந்தூரில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications