கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார பணியாளர், செவிலியர் வேலை.. கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் இடைநிலை சுகாதார பணியாளர், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இந்த பணியிடத்துக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.14,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு உட்பட்ட என்.ஆர்.எச்.எம். திட்டத்தின் கீழ் உள்ள ஒரு நகர்புற சுகாதார செவிலியர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலமாக தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்துக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.14,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுபோல 9 இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. பணியிடம் தொடர்பான தகுதிகள், வயது வரம்பு, இனசுழற்சி மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம்(செப்டம்பர்) 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை போல் சென்னையிலும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் செவிலியர் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் உள்ள பெரு சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் ஆரோக்கிய நல மையங்களில் பின்வரும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளார்கள். கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1. மருத்துவ அதிகாரி,
மொத்த இடங்கள்: 30
மாத ஊதியம்: ரூ.60000
வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
2. ஸ்டாஃப் நர்ஸ்
மொத்த இடங்கள்: 32
மாத ஊதியம்: ரூ. 18,000
வயது வரம்பு: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
3. MPHW(பல்நோக்கு சுகாதார பணியாளர்)/சுகாதார இன்ஸ்பெக்டர் - தரம் II கிரேடு 2 (ஆண்கள்)
மொத்த இடங்கள்: 32
மாத ஊதியம்: ரூ.14,000
வயது வரம்பு: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4. உதவி பணியாளர்
மொத்த இடங்கள்: 66
மாத ஊதியம்: ரூ.8500
வயது வரம்பு: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
5. ஆலோசகர்/உளவியலாளர்
மொத்த இடங்கள்: 5
மாத ஊதியம்: ரூ.23,000
வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
6.மனநல நிபுணர்கள்
மொத்த இடங்கள்: 5
மாத ஊதியம்: ரூ.23,000
வயது வரம்பு: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பப் படிவம் மற்றும் ஆட்சேர்ப்பு விவரங்களை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர், சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் கட்டிடங்கள், சென்னை - 600003
விண்ணப்பிங்கள் 06.09.2024 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.00 மணிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர முடியும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இது தொடர்பான விளக்கங்களை அறியவும் மேலும் விவரங்களை அறியவும் சென்னை மாநகராட்சி அலுலவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உறுப்பினர் செயலாளர், சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் பில்டிங்ஸ், சென்னை - 600003 தொலைபேசி: 044 - 2561 9330, 044 - 2561 9209 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications