Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.92,000 ஊதியம்.. சிஆர்பிஎப்பில் ஏட்டு, உதவி சப் இன்ஸ்பெக்டர் பணி..10, 12 படித்தவர்களுக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் உதவி சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு என காலியாக உள்ள 1,458 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.92 ஆயிரம் வரை மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு பாதுகாப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையாகும் (Central Reserve Police Force). இந்த படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பின்படி தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம். இதுபற்றிய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தற்போது 2 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Assistant Sub Inspector (Steno) பணிக்கு 143 பேரும், Head Constable (Ministerial) பணிக்கு 1315 பேர் என மொத்தம் 1,458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் 10, 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம்.

மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

Assistant Sub Inspector (Steno) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.29,200ம், அதிகபட்சமாக ரூ.92,300 வரையும் கிடைக்கும். Head Constable (Ministerial) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.25,500ம், அதிகபட்சமாக ரூ.81,100 வரையும் வழங்கப்பட உள்ளதாக பணி தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

விண்ணப்பத்தாரர்களின் குறைந்தபட்ச வயது என்பது 18 ஆக இருக்க வேண்டும். அதிகப்பட்சம் என்றால் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 26.01.1998 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினர் உள்பட பிற பிரிவினருக்கும் அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.crpf.nic.in எனும் இணையதளம் சென்று ஆன்லைனிலேயே 2023 ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் 2023 ஜனவரி மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் கம்ப்யூட்டர் வழி தேர்வு, திறனறி தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்று சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, சேலம், தேனி, திரச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளன.

பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+