மிஸ் பண்ணாதீங்க.. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2439 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2439 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: நீங்கள் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உங்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிஆர்பிஎஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, பிஎஸ்எஃப் ஆகியவற்றில் 2439 பணியிடங்கள் காலியாக உள்ளது... இவற்றுக்கு விண்ணப்பங்களை சிஆர்பிஎஃப் வரவேற்றுள்ளது.
சிஆர்பிஎஃப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் சிஆர்பிஎஃப் -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான crpf.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம்...

நேர்காணலின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15, 2021 வரை நடைபெறும்.
இது தவிர, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை நேரடியாக, https://crpf.gov.in/rec/recruitment.html என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். இது தவிர, சிஆர்பிஎஃப் ஆட்சேர்ப்பு 2021 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, https://crpf.gov.in/rec/recruitment-details.html ஐப் பார்வையிடலாம்.
சிஆர்பிஎஃப் ஆட்சேர்ப்பு 2021 இன் கீழ் நிரப்பப்படும் 2439 பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் முன், முக்கிய தேதிகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விவரங்களைப் பார்க்க விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மொத்த காலியிடங்கள் : 2439
துறைவாரியாக காலியிடங்கள்
AR: 156
BSF: 365
CRPF: 1537
ITBP: 130
SSB: 251
விண்ணப்பிக்க யாருக்கு தகுதி: ராணுவம், சிஆர்பிஎஃப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, பிஎஸ்எஃப் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
வயது : 62வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
தேவையான சான்றிதழ்கள்
ஓய்வூதியச் சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ், விண்ணப்பம் (விண்ணப்பித்த பதவியின் பெயரை மேலே குறிப்பிட வேண்டும்), மூன்று சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பட்டம் மற்றும் வயது சான்று.
நேர்முகத்தேர்வு:
நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15 வரை நேர்முகத்தேர்வு நடைபெறும். முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதால் முழு விவரங்களை சிஆர்பிஎப் இணையதளத்தில் பாருங்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications