அனுபவம் வேண்டாம்.. டிகிரி போதும்.. சென்னை HCL வேலைவாய்ப்பு.. நாளை முதல் ஜூலை 11 வரை இண்டர்வியூ
சென்னை:சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் நாளை (ஜூலை 7) முதல் ஜூலை 11ம் தேதி வரை 4 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. டிகிரி முடித்த பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக எச்சிஎல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

எச்சிஎல் நிறுவனத்தில் Customer Service Representative பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதாவது Freshers Voice Process for Healthcare and Banking Process என்ற பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டம். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2025ல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இருப்பினும் பிஇ, பிடெக், டெக் கிராசூவேட்ஸ் மற்றும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சரளமாக ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி என்பது இருக்கும். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி வழங்கப்படும். எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட் ஷிப்ட்டில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஜூலை 7 ) ம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இது Face to Face இண்டர்வியூவாகும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganallur ELCOT Campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்லும்போது லேப்டாப் எடுத்து செல்ல அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications