சென்னை - கோவையில் ஐடி வேலை வேண்டுமா? வெளியான முக்கிய அறிவிப்பு.. நாவலூரில் ஆகஸ்ட் 23ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் (Hexaware Technologies) எனும் ஐடி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 23ம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் (Hexaware Technologies) ஐடி நிறுவனத்தில் தற்போது மைக்ரோசாப்ட் கிளவுட் நேட்டிவ் லீட் -ரியாக்ட் (Microsoft Cloud Native Lead- React) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it jobs job Chennai

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டாட்நெட் கோர் (Dotnet Core), ரியாக்ட் (React), வெப் ஏபிஐ (Web API), அசூர் பாஸ் (Azure Paas), ஃபங்சன் அப்ஸ் (Function Apps), அப் சர்வீசஸ் (App Serices), Cosmos DB, மைக்ரோசர்வீசஸ், எஸ்க்யூஎல் சர்வர் உள்ளிட்டற்றவில் ஸ்கில்லாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூம் உள்பட பிற விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள். அதன்பிறகு உடனடியாக விண்ணப்பத்தாரர்களை தொடர்பு கொண்டு இண்டர்வியூவுக்கு அழைப்பார்கள்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ நடக்கும். அன்றைய தினம் Hexaware Technologies, Plot No H 5, Sipcot IT Park, Near Navalur Post, Sirucheri-603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ காலை 9 மணிக்கு என்பதால் முன்கூட்டியே செல்வதன் மூலமாக கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கர்நாடகாவில் பெங்களூர், மகாராஷ்டிராவில் மும்பை, புனே, உத்தர பிரதேசத்தில் நொய்டா, குஜராத்தில் அகமதாபாத், உத்தரகாண்ட்டின் டேராடூன் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+