திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வேலை காலி இருக்கு..என்னென்ன தகுதிகள்..எப்படி விண்ணப்பிப்பது
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டள்ளது. டிரைவர் முதல் சமையல் உதவியாளர் வரை பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள புராண - புராதனச் சிறப்பு மிக்க தலங்களில், திருவொற்றியூர் திருத்தலமும் ஒன்று. தொண்டை நாட்டு 32 திருத்தலங்களில், இந்தத் தலமும் ஒன்று ஸ்தல புராணம் விவரிக்கிறது.

இங்கே உள்ள சிவனாரின் ஆதிபுரீஸ்வரர், ஸ்ரீதியாகராஜ சுவாமி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீதிரிபுரசுந்தரி. ஆதிபுரீஸ்வரர் கோயில் என்றும் தியாகராஜ சுவாமி கோயில் என்றும் அழைக்கப்பட்டாலும் வடிவுடையம்மன் கோயில் என்று கூறினால் எல்லோருக்கும் எளிதில் தெரியும்.
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் கார்த்திகை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் கவசம் இல்லாமல் சுயம்புவாக தோன்றிய ஆதிபுரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கார்த்திகை தீப உற்சவம் என்பது சுயம்புலிங்கமாக புற்று வடிவில் தோன்றிய ஆதிபுரீஸ்வரர் மிகவும் பழமை வாய்ந்தவர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு தானாக தோன்றியதாகவும் ராமனின் மகன் லவா பிரதோஷம் தினத்தன்று இங்கு வந்து வழிபட்டார் எனவும் கோவில் ஸ்தல புராணம் கூறுகிறது.
இந்த மூன்று நாட்களும் ஆதிபுரீஸ்வரருக்கு மகாபிஷேகம், புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை மூன்று தினங்கள் மட்டுமே கவசம் இன்றி சுவாமியை பரிபூரணமாக தரிசிக்க முடியும். இதனால் பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள்.
சக்தி நிறைந்த திருத்தலம். சாந்நித்தியம் நிறைந்த ஆலயம். வருடந்தோறும் மாசிப் பெருந்திருவிழா,பிரம்மோத்ஸவ விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை:
ஓட்டுநர் 1 ரூ.18,500-58600/- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
தபேதார் 1 ரூ.15,900-50,400/- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
உதவி மின் பணியாளர் 1 ரூ.16,600-52,400/- எலக்ரிகல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு
வேதபாராணம் 1 ரூ.15,700-50,000/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர் 2 ரூ.15,900-50,400/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி சுயம்பாகம் 2 ரூ.10,000-31,500/ பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி பரிச்சாரகம் 1 ரூ.10,000-31500/ பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர் 1 ரூ.10,000-31,500/- சமையல் அனுபவம் வேண்டும். தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் 1 ரூ.6,900-21,500/- உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவாளர் 1 ரூ.4,200-12,900/- தமிழ் நன்றாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022. மாலை 05.45 மணி வரை. தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை - 19 ஆகும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications