இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு.. விண்ணப்பிக்க ரெடியா?
அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் விண்ணப்பம் செய்வதற்கான பதிவு தொடங்கி இருக்கிறது.
டெல்லி: இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் விண்ணப்பம் செய்வதற்கான பதிவு தொடங்கி இருக்கிறது. வருகிற 31-ந்தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் என விமான படை அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படையில் அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடக்கிறது. இதற்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பப்பதிவு தொடங்கியது.
கடந்த 17-ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் 31-ந்தேதி (மாலை 5 மணி வரை) விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு மே மாதம் 20-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

என்ன வயது
அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். அதிகபட்சமாக 21 வயது உடையவர்கள் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தகுதியாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்ன படிப்பு
கல்வித்தகுதி என்ன? டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் உடன் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்டரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.

தொழில் படிப்பு
50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்தும் தொழில்சார்ந்த பாடம் அல்லாத இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 2 ஆண்டு தொழில் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க அழைப்பு
இதேபோல, 10, 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது குறைந்தபட்சம் 50 சதவீதம் மொத்தம் மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 2 ஆண்டு தொழில் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31ம் தேதி ஆகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications