வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அழைக்கும் IBM நிறுவனம்.. டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்
பெங்களூர்: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம்மில் இருந்து குவாலிட்டி இன்ஜினியர் (டேட்டா) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்பட 19 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் (IBM) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

ஐபிஎம் நிறுவனத்தில் தற்போது குவாலிட்டி இன்ஜினியர் (டேட்டா - Quality Engineer - Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு ‛என்ட்ரி லெவல்' பணியாகும்.
இந்த பணிக்கு, விண்ணப்பம் செய்வோர் இளநிலை பிரிவில் டிகிரி அல்லது முதுநிலை பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். டெக்னிக்கல் மற்றும் புரோபஷனலை எடுத்து கொண்டால் Complex SQl Queries, Azure Databricks உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஸ்டாக்ஹோல்டர் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். டீம் பிளேயராக பணியாற்ற வேண்டும். கோலாபரேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி, பணிக்கான மாத சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல், பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஹைபிரிட் மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications