தமிழகத்தில் மத்திய அரசு பணி! 12 முடித்திருந்தாலே போதும்! மாதம் ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை ஊதியம்
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தென்மாநிலங்களில் காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 12 ம் வகுப்பு முடித்தவர் விண்ணப்பித்து ரூ.23 ஆயிரம் முதல் ரூ.78 ஆயிரம் வரை மாத சம்பளமாக பெற முடியும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஓசிஎல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுபற்றிய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் (அவியேஷன்) Junior Operator (Aviation) பணியில் 39 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தென்இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 28 இடங்களும், கர்நாடகாவில் 6 இடங்களும், தெலங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பை பொது, இடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு- சம்பளம் எவ்வளவு?
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 26 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.23 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.78 ஆயிரமும் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் திறமை, உடல்தகுதி தேர்வு மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணிக்கு பொது, இடபிள்யூ மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.iocl.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். இந்த இணையதளத்தில் Career s என்பதை கிளிக் செய்து வேலைக்கான அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜூலை 29ம் தேதி கடைசி நாளாகும்.
வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய் Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications