IT Jobs: அனுபவம் தேவையில்லை.. B.com, B.sc, BBA, BCA முடித்தோருக்கு ஐடி வேலை.. அழைக்கும் Deloitte
சென்னை: ‛டெலாய்ட்' நிறுவனத்தில் இருந்து ஜுனியர் அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, பிசிஏ, பிபிஎம் உள்பட கல்லூரி படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
‛டெலாய்ட்'(Deloitte) நிறுவனத்தில் தற்போது FCI -Junior Analyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பிபிஏ, பிகாம், பிஎஸ்சி, பிசிஏ, பிபிஎம் டிகிர அல்லது அதற்கு நிகரான படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

அனுபவம் வேண்டாம்
இதுதவிர 0- 3 ஆண்டு வரை பேங்கிங் இன்டஸ்ட்ரி, பைனான்சியல் சர்வீஸ் ஆபரேஷன் உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவத்தில் 0 - 3 ஆண்டு என்று கூறப்பட்டுள்ளதால் முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.
அனலிசிஸ் திறமை
அதன்படி ரிசர்ஜ் மற்றும் இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டு ரிப்போர்ட்டை முழுமையாக அனலிசிஸ் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
எக்ஸல்லில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். US/Non UUS Federal மற்றும் State AML ரெகுலேஷன், பாலிசிகள் மற்றும் புரோசிஷர்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
ஷிப்ட் எப்படி?
மேலும் ரோட்டோஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
3 இடங்களில் நியமனம்
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எப்போதுவேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications