IT Jobs: TCS ஐடி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? ரெடியா இருங்க.. நவம்பர் 22ல் சென்னையில் இண்டர்வியூ
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நவம்பர் 22ம் தேதி (சனிக்கிழமை)காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கு பயன் பெறலாம்.
நம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. இதன் விரிவாக்கம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். பிரபல டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

டிசிஎஸ் அலுவலகம் சென்னை, பெங்களூர், புனே உள்பட நம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து தற்போது Appian Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 14 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த அனுபவம் கொண்டவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இதுதொடர்பான இண்டர்வியூ நவம்பர் 22 ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்பும் நபர்கள் TCS Office,SNR Kumaran Nagar, Sholinganallur, OMR, Chennai 600 019, Tamil Nadu, India என்பது முகவரியில் நடைபெற உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications