For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ராணுவத்தில் சேர வேண்டுமா? கோவையில் ஆள் சேர்ப்பு முகாம்.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக கோயம்புத்தூரில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் சேர்வது இப்போதும் இளைஞர்களுக்கு பெரிய கனவு. முக்கியமாக தமிழக இளைஞர்கள் பலர் எப்போதும் இந்திய ராணுவத்தில் சேர்வதை தங்களுக்கு விருப்பமான வேலையாக பார்க்கிறார்கள். அவர்களுக்காக தற்போது கோயம்புத்தூரில் ராணுவ வேலைக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது.

Job News: Indian Military Recruitment gonna happen in Coimbatore

இந்திய ராணுவத்தில் சிப்பாய் பல்வேறு பணிகளுக்காக இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 1 அக்டோபர் 2020 தேதியின்படி 17 வயது 6 மாதங்கள் நிரம்பியிருக்க வேண்டும். மொத்தம் 23 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

அதிலும் மிக முக்கியமாக கொங்கு மண்டலத்தையும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்களும் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, தேனி, சேலம், ஆகியோருக்கு இந்த தேர்வில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடக்கும் இடம்: மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.

விண்ணப்பம்: மார்ச் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எப்படி; www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

English summary
Job News: Indian Military Recruitment gonna happen in Coimbatore in few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X