சென்னை மாநகராட்சியில் வேலை! 345 பணியிடங்கள்.. 8ஆம் வகுப்பு முடிச்சவங்களுக்கும் ஜாப் இருக்கு
சென்னை: சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்பிபிஎஸ் முதல் 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரை வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 345 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* மருத்துவ அதிகாரி - 60
* ஸ்டாஃப் நர்சு - 60
* பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் - கிரேடு-II) - ஆண்கள் - 60
* சப்போர்ட் ஸ்டாஃப் - 60
* துணை செவிலியர் மற்றும் பேறுகாலப் (பெண்) பணியாளர் (ANM) - 88
* எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் - 06
* Special Educator for Behavioural Therapy - 03
* Occupational Therapists - 03
* சமூக சேவகர் - 03
* மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் - 01
* ஆய்வகம் - ஸ்டோர் அஸ்சிஸ்டண்ட் - 01
என மொத்தம் 345 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். மருத்துவ அதிகாரி பணிக்கு எம்பிபிஎஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிஜிஎன்எம், டிஎம்எல்டி, எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. அதாவது ஸ்டாஃப் நர்சு பணிக்கு டிஜிஎன்.எம் அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சப்போர்ட் ஸ்டாஃப் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
ஸ்டாஃப் நர்சு பணிக்கு விண்ணப்பிக்க வயது உச்ச வரம்பாக 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ரே டெக்னிஷியன், சப்போர்ட் ஸ்டாஃப் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். இதர பணியிடங்கள் அனைத்திற்கும் 40 வயது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
* மருத்துவ அதிகாரி - ரூ.60,000/
* ஸ்டாஃப் நர்சு - ரூ. 18,000
* பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் - கிரேடு-II) - ஆண்கள் - ரூ.14,000
* சப்போர்ட் ஸ்டாஃப் - ரூ. 8,500
* துணை செவிலியர் மற்றும் பேறுகாலப் (பெண்) பணியாளர் (ANM) - ரூ.14,000
* எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.13,300
* Special Educator for Behavioural Therapy - ரூ.23,000
* Occupational Therapists - ரூ.23,000
* சமூக சேவகர் - ரூ. 23800/-
* மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் - ரூ. 25000/-
* ஆய்வகம் - ஸ்டோர் அஸ்சிஸ்டண்ட் - ரூ.12000/-
தேர்வு முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலானது.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தகுந்த சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Buildings, Chennai - 600003
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2025 மாலை 5.00 மணிக்குள். இதற்குபிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க இங்கே கிளிக் செய்யவும்: https://chennaicorporation.gov.in/gcc/pdf/Urban_Health_Wellness.pdf












Click it and Unblock the Notifications