சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை.. சூப்பர் சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த கூட்டு நிறுவனமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது. 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சூப்பர்வைசர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் & கல்வி தகுதி:
சூப்பர்வைசர் (ஆபரேஷன்ஸ் மற்றும் மெயின்டனன்ஸ்) - பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியை பொறுத்தவரை சூப்பர்வைசர் ஆபரேஷன்ஸ் பணிக்கு டிப்ளமோ என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். தமிழக அரசின் ஏதாவது ஒரு பாலிடெக்னிக்கில் முடித்து இருக்க வேண்டும்.
சூப்பர்வைசர் (மெயின்டனன்ஸ்) பணிக்கு தமிழக அரசின் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் ஒருங்கிணைந்த, மின் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் / நுண்செயலி, மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, கருவி தொழில்நுட்பம், மின்னணுவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் உறுதி செய்து கொள்ளலாம்;
வயது வரம்பு:
18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி தேர்வு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.26,660 வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பணியின் திருப்தி அடிப்படையில் இந்த ஒப்பந்தம் நீட்டிப்பு அல்லது குறைக்கப்படலாம்.
தேர்வு முறை:
மெரிட் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழில் நன்கு படிக்க எழுத தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் நேரில் வர வேண்டிய முகவரி:
Institute of Chemical Technology,
C I T Campus, Tharamani,
Chennai- 600 113
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://backend.delhimetrorail.com/documents/8865/Advt-Chennai-Metro-Walk-in-Screening-ENGLISH.pdf












Click it and Unblock the Notifications