மத்திய அரசு வேலை.. கோவையில் பணியிடம்! மாதம் 29 ஆயிரம் சம்பளம்.. சரியான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், லோயர் டிவிஷன் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தின் கோவையில் உள்ள அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) - 08
2. லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) - 01
3. டெக்னீசியன் (TE) (கள/ஆய்வகம்) - 03
4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (டிஏ) (பீல்டு/லேப்) - 04
கல்வி தகுதி: எம்.டி.எஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். டெக்னீசியன் உதவியாளர் பணிக்கு அறிவியல் பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: டெக்னிக்கல் அஸ்சிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம். டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங், லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
மல்டி டாஸ்கிங் - ரூ.18,000
லோயர் டிவிஷன் கிளர்க் - ரூ.19900/-
டெக்னீசியன் பீல்டு - ரூ.21700/-
டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் - ரூ.29200/-
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு / நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யும் விண்னப்பதாரர்களுக்கு கோவையிலே பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ifgtb.icfre.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 08.11.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2024
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ifgtb.icfre.gov.in/jobs/vacancy72.No.012024.pdf
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications