மத்திய அரசின் கூட்டுறவு சொசைட்டியில் வேலை.. தமிழகத்திலேயே பணியிடங்கள்.. செம சான்ஸ்!
சென்னை: வேலூரில் உள்ள மத்திய அரசின் கூட்டுறவு சொசைட்டியில் (SIMCO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை பார்க்கலாம்.
மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சவுத் இந்தியா மல்டி ஸ்டேட் கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டி லிமிடெட்டு (SIMCO) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிம்கோ அமுதம் கோஆப்ரேட்டிவ் ஆயுஷ்& பல் மருத்துவமனை. சிம்கோ கோஆப்ரேட்டிவ் சூப்பர்மார்க்கெட்டுகளில் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன், சூப்பர்வைசர் என மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர்: 12
விற்பனையாளர்: 22
சூப்பர்வைசர்: 14
என மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி / ஐடிஐ / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சூப்பர்வைசர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 21- வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு.
சம்பளம் எவ்வளவு & தேர்வு முறை: சம்பளத்தை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 வரை வழங்கப்படும். சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர் பணிக்கு ரூ.6200 - 28,200 வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29.02.2024 ஆகும். விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் விவரங்கள் உள்ளிட்டவற்றின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
HEAD OFFICE,
TOWN HALL CAMPUS,
NEAR OLD BUS STAND,
VELLORE - 632004.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். www.simcoagri.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். வங்கி மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம். இது குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்திலேயே பணி ஒதுக்கப்படும். தேர்வு அறிவிப்பை படிக்க https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-english.pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications