தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. டிகிரி முடிச்சிருந்தால் போதும்
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள 26 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (TTD) என்பது அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். தமிழக சுற்றுலாத் துறையால் இந்த நிறுவனம் இயக்கப்படுகிறது. தனியார் பங்களிப்புடன் இணைந்து சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது 26 துணை பொது மேலாளர் (டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சுற்றுலா மேம்பாடு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* ஏஜிஎம் (டிஜிட்டல் மார்க்கெட்டிங் & சுற்றுலா ஊக்குவிப்பு) - 01
* அசோசியேட் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) - 03
* சீனியர் அசோசியேட் - 03
* நிகழ்வு மேலாளர் Event Manager - 01
* அசோசியேட் (ஐடி ) - 01
* சீனியர் அசோசியேட் (திட்ட உருவாக்கம்) - 02
* கட்டிடக் கலைஞர்கள் - 03
* ஆர்கிடெக் - 04
* சிவில் இன்ஜினியரிங்- 04
* சைட் இன்ஜினியர் (சிவில் - 3 மற்றும் எலக்ட்ரிக்கல் - 1) - 04
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களும், இன்ஜினியரிங் முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும். கல்வி தகுதியுடன் பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?:
1. ஏஜிஎம் (டிஜிட்டல் மார்க்கெட்டிங் & சுற்றுலா ஊக்குவிப்பு) - ரூ.70,000 - 1,00,000/-
2. அசோசியேட் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) - ரூ.20,000 - 40,000/-
3. சீனியர் அசோசியேட் - ரூ.25,000 - 40,000/-
4. Event மேலாளர் (மதுரை) - ரூ.50,000 - 75000/-
5. அசோசியேட் (ஐடி ) - ரூ.20,000 - 40,000/-
6. சீனியர் அசோசியேட் - ரூ.50,000 - 75,0000/-
7. ஆர்கிடெட்க் - ரூ.50,000/-
8. Interns(கட்டிடக்கலைஞர்) - ரூ.20,000/-
9. Interns (சிவில் இன்ஜினியரிங்) - ரூ.20,000/-
10. சைட் இன்ஜினியர் (சிவில் -3 மற்றும் எலக்ட்ரிக்கல் -1) - ரூ.40,000/-
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://ttdconline.com/. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2024. விண்ணப்பிக்க விரும்புவர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை முழுமையாக படித்து தெரிந்து கொள்வது அவசியம். தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே கிளிக் செய்யவும். https://ttdconline.com/_next/tn.gov.in/TTDC_REC_2024.pdf
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே அப்ளை பண்ணுங்க.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications