ரூ.31,000 வரை மாத சம்பளம்.. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. தேதி முடியப்போகுது
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மதுரையில் இருந்து தேனி செல்லும் ரோட்டில் பல்கலை நகரில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபஙர்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள் என்ன?
மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் Project Associate - I எனும் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதில் காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை தொடர்பான விபரம் வெளியாக நிலையில் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை வழங்கப்படும். அதன்படி நெட் (NET), கேட் (GATE)தகுதி பெற்றவர்களுக்கு ரூ.31 ஆயிரத்துடன் HRA வழங்கப்படும். நெட், கேட் தேர்வு தகுதி பெறாதவர்களுக்கு ரூ.25 ஆயிரத்துடன் HRA வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் மாஸ்டர் டிகிரியை முடித்திருக்க வேண்டும். அதன்படி Bioinformatics/computational Biology/Genomics/Biotechnology பிரிவுகளில் எம்எஸ்சி, எம்டெக் உள்ளிட்ட படிப்புகளை 55 சதவீத மதிப்பெண்களுடன் மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் படித்து முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு என்பது கிடையாது. விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுவர்கள் 2 ஆண்டுகள் வரை பணி செய்ய முடியும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 9 ம் தேதிக்குள் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி பயோடேட்டா, போட்டோ, Attested சான்றிதழ்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை Dr.Rajendharan, Department of Genetics, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதோடு சாப்ட் காப்பிகளை [email protected] எனும் இமெயிலுக்கு டிசம்பர் 9 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications