அரசு பணிக்கு ‛‛தமிழ்’’ தேர்வு கட்டாயம்.. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலை தொடர்பாக புதிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடம் நிரப்பப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் எனவும், தமிழில் தேர்வு நடத்தப்படும் எனவும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணியிடங்களில் வெளிமாநிலத்தவர்கள் நியமனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதாவது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம், விமான நிலையங்கள் உள்பட பிற நிறுவனங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமான பணியமர்த்தப்படுவதாக சமீப காலமாக புகார் எழுந்துள்ளன.

தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க..
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்களை பணியமர்த்துவதுதன் மூலம் மத்திய அரசு தமிழர்களை புறக்கணிப்பதாக தமிழகத்தை ஆளும் கட்சி உள்பட பாஜகவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சில அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மருத்துவ தேர்வு வாரியம் அறிவிப்பு
அதோடு தமிழ்நாட்டில் மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே கிடைக்க மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் பின்பற்றுவதாக மத்திய இந்நிலையில்தான் தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில் அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் தேர்ச்சி கட்டாயம்
அதன்படி உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்பாது தமிழ் தேர்ச்சி கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இந்த பணி முழுவதும் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையிலும், இதில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்வதை தடுக்கும் வகையிலும் தான் இந்திய புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ளது. இந்த பணிக்கு வரும் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதும், நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications