டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு.. இந்திய விமான ஆணையத்தில் நல்ல வேலை.. கைநிறைய சம்பளம்
டெல்லி: இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் மாதம் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1.10 லட்சம் சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய விமான ஆணையம் (Airports Authority Of India or AAI) மத்திய அரசின் விமான போக்கவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம். இதன்மூலம் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெற முடியும்.

காலியிடங்கள் எவ்வளவு?
இந்திய விமான நிலைய ஆணையத்தில் சீனியர் அசிஸ்டென்ட் (Senior Assistant) பிரிவில் 3 வகைகளாக மொத்தம் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி Senior Assistant (Official Language) பிரிவுக்கு 5 பேர், Senior Assistant (Finance) பிரிவுக்கு 16 பேர், Senior Assistant (Electronics) பிரிவுக்கு 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பதவி வாரியாக பார்த்தால் Senior Assistant (Official Language) பணிக்கு ஆங்கிலம், இந்தி பாடப்பிரிவில் டிகிரி அல்லது மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். Senior Assistant (Finance) பிரிவுக்கு பிகாம் அல்லது வேறு ஏதேனும் பட்டபப்டிப்பை முடித்திருக்க வேண்டும். Senior Assistant (Electronics) பணிக்கு டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ரேடியோ என்ஜினியர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது எவ்வளவு?
விண்ணப்பத்தாரர்களின் வயது 30.11.2022ம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கீடப்படும். அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதுவரை விலக்கு வழங்கப்படுகிறது. மேலும் அரசு விதிகளின் படி மற்றவர்களுக்கும் வயது சலுகை உண்டு.

சம்பளம் எவ்வளவு?
மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.40 லட்சமும் கிடைக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சண்டிகர், டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை www.aai.aero எனும் இணையதளத்தில் Careers என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பம் டிசம்பர் மாதம் 21ம் தேதி தொடங்கி 2023 ஜனவரி மாதம் 20ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் இந்த காலக்கட்டத்துக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பம் கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையிலேயே செலுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications