மத்திய அரசு SIDBI வங்கியில் வேலை.. மாதம் 44 ஆயிரம் சம்பளம்.. அருமையான வாய்ப்பு.. விட்றாதீங்க
சென்னை: சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் (SIDBI) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் இந்த வங்கியில் உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி என்ன, வயது வரம்பு, சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
SIDBI எனப்படும் சிறுதொழில் வளர்ச்சி வங்கி, மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.
சிறு தொழில்களுக்காக கடன் அளித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த வங்கி மேற்கோள்கிறது. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள கிரேடு ஏ, கிரேடு பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
உதவி மேலாளர் கிரேடு ஏ, மேலாளர் கிரேடு பி பணியிடங்களில் மொத்தம் 76 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை பொருளியல்/ கணிதவியல்/ புள்ளியியல்/ வணிக நிர்வாகம்/ என்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. கிரேடு பி பணிக்கு குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் கோரப்பட்டுள்ளது. கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
21 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கிரேடு ஏ பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். கிரேடு பி பணிக்கு விண்ணப்பிக்க 33 வயது ஆகும். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. சம்பளம்: மாதம் ரூ. 55,200- 1,15,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025 ஆகும். விண்ணப்பதாரர்கள் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அளித்தால், கடைசியாக எந்த விண்ணப்பம் அளிக்கப்பட்டதோ அது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.sidbi.in/head/uploads/career_document/SIDBI_DETAILED_WEB_ADVT_2025.pdf
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications