ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு உதவி ஆசிரியர்கள்- நிருபர்கள் தேவை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் ஒரு அருமையான வாய்ப்பு.

உங்களுக்கு நாட்டு நடப்பு அத்துப்படியா... நன்றாக எழுத வருமா.. நன்றாக தலைப்பு போட வருமா.. எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிரித்து மேயும் திறமை உள்ளவரா.. எழுத்தில் சாதிக்க ஆர்வம் உள்ளதா...?

Sub editors, Reporters wanted for Oneindia Tamil

அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது.

ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் உதவி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறந்த ஊதியத்துடன் சுதந்திரமாக பணியாற்ற ஏற்ற வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.

3 உதவி ஆசிரியர் (செய்திகள் பொது), ஒரு உதவி ஆசிரியர் (விளையாட்டு செய்திகள்), ஒரு உதவி ஆசிரியர் (பிசினஸ் செய்திகள்), ஒரு உதவி ஆசிரியர் (சினிமா), ஒரு முது நிலை உதவி ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் (டிரைவ்ஸ்பார்க்) பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை.

இதுதவிர மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து பணிபுரிய செய்தியாளர்கள் தேவை. முக்கியச் செய்திகளை உடனுக்குடன், முழுமையாக சேகரிக்கும் திறமையுடைய, அரசு - அரசியல் - காவல்துறை வட்டாரங்களில் நல்ல தொடர்புகளை வைத்திருக்கக் கூடிய இளம் செய்தியாளர்கள் தேவை.

உங்களது சுய விவரங்களை தயார் செய்து உடனே அனுப்பி வையுங்கள்... நல்ல திறமையாளர்களுக்கு நிச்சயம் வாய்ப்புண்டு.

நில்லுங்க.. இன்னொரு வேலையும் இருக்கு...

புள்ளிவிவரத்தை வைத்து சூப்பராக "இன்போகிராபிக்ஸ்" போடத் தெரிந்தவர்களுக்கும் ஒரு பணியிடம் காத்திருக்கிறது. கிராபிக்ஸில் நல்ல திறமை, அனுபவம், செய்தி ஞானம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களது பயோடேட்டவை இந்த மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கவும்

st.arivalagan@oneindia.co.in

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oneindia Tamil news portal needs young and talented Senior Sub editors and Sub Editors for various categories. We also need reporters for Madurai, Coimbatore, Trichy and Salem. Qualified candidates can send in their CVs and apply.