TCS ஐடி வேலைவாய்ப்பு.. சென்னை – ஹைதராபாத் உள்பட 4 இடங்களில் வேலைவாய்ப்பு.. ஆன்லைனில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Automation Testing - Selenium பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TCS

இந்த பணிக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்பாக Selenium Cucumber Java Test Automation-ல் 3 முதல் 7 ஆண்டு வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். வெப் என்விரான்மென்ட், வெப் எலிமென்டஸ் மற்றும் வெப் எலிமென்ட்ஸ் ஆபரேஷன் உள்ளிட்டவவை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.

Functional மற்றும் Regression Test Automation உள்ளிட்டவை பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும். Selenium Suite of Tools (செலினியம் ஐடிஇ, செலினியம் ஆர்சி, செலினியம் வெப்டிரைவர் மற்றும் செலினியம் கிரிட்) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

ஜாவா புரோகிராமிங் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டீபக்கிங் டெஸ்ட் கேசஸ் மற்றும் பிக்ஸிங் எரர்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். செலினியம் பயன்படுத்தி டெஸ்ட் கேசஸ் ஜெனரேட் செய்ய தெரிந்தருக்க வேண்டும். பிடிடி தெரிந்தருக்க வேண்டும்.

அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ என்பது ஆன்லைனில் (Virtual) தான் இருக்கும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் (அடிபட்லா), புனே உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+