தமிழக அரசு வேலை! சென்னையிலேயே பணியிடம்.. 8 ஆம் வகுப்பு தகுதி தான்.. 58 ஆயிரம் சம்பளம்.. செம சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் சட்டத்துறை அலுவலகத்தில் (TN Litigation Dept) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மற்றும் சென்னையில் பணி அமர்த்தும் வகையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.58 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக அரசின் சட்டத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் பணியிடங்கள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணி கிடையாது. இது முழுமையான அரசு பணியாகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

tn-litigation-dept-hiring-2025-16-office-assistant-jobs-available

பணியிடங்கள் விவரம்:

அலுவலக உதவியாளர் பணியிடங்கள் - மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன. சென்னை மற்றும் மதுரையில் காலிப்பணியிடம் உள்ளது. இனசுழற்சி அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில், பொதுப்பிரிவினருக்கு 4 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

தேர்வர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு நகல், கல்வி சான்றிதழ், வயது வரம்புக்கான சான்றிதழ் ஆகியவற்றை செல்ப் அட்டெஸ்ட் செய்து நகலாக அனுப்ப வேண்டும். சாதி சான்றிதழ் நகலும் கட்டாயம் இணைக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700 - 58,100 வரை சம்பளமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Advocate General of Tamil Nadu,
High Court,
Chennai - 600104

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கடைசி நாளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+