TN Police jobs: தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் வேலை.. 2,833 பணியிடங்கள்.. வந்தது அறிவிப்பு.. ரெடியாகுங்க
சென்னை: தமிழ்நாட்டில் 2,833 காவலர் பணியிடங்களை (TN Police jobs - TNUSRB) நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தேர்வர்கள் நாளை முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். காவலர் தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதியினையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. காவல் துறையில் உள்ள பணியிடங்கள் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பபடுகிறது. காவல்துறையில் எஸ்.ஐ, காவலர்கள், தீ அணைப்பு படையினர், சிறைக்காவலர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் பணியை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
2,833 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விருப்பம் உள்ள தேர்வர்கள் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். காவலர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்படும்.
எஸ்.ஐ தேர்வுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீருடை பணியாளர் தேர்வு ஆணைய இணையதளத்தில் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாகவே மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
01.07.2025 இன் படி 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பளம் எவ்வளவு:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,200 முதல் 67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
நாளை முதல் அவகாசம் தொடங்க இருப்பதால் தேர்வர்கள் விண்ணப்பிபதற்கான ஆவணங்களை தயார் செய்து வைத்துக்கொள்வது நல்லது. தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications