For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021.. தமிழ்நாடு அரசு வேலை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு உயர்க்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளை (16ம் தேதி) தொடங்கி 17.10.2021ம் தேதி வரை http://trb.tn.nic.in/ இணையளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது,.

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால்.. அரசு நடவடிக்கை பாயும்.. பள்ளிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கைமாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தினால்.. அரசு நடவடிக்கை பாயும்.. பள்ளிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

 காலியிடங்கள்

காலியிடங்கள்

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade - I, Computer instructor Grade-1
காலியிடங்கள்: 2207

பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்:
1. தமிழ் - 271
2. ஆங்கிலம் -192
3. கணிதவியல் -114
4. இயற்பியியல் - 97
5. வேதியியல் - 191
6. விலங்கியியல் -109
7. தாவரவியல் - 92
8. பொருளாதாரவியல் - 289
9. வணிகவியல் - 313
10. வரலாறு - 115
11. புவியியல் - 12
12. அரசியல் அறிவியியல் - 14
13. வீட்டு அறிவியியல் - 03
14. இந்திய கலாசாரம் - 03
15. உயிா் வேதியியல் - 01,
16. உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1) - 39
15. கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) - 44.

ஊதியம்

ஊதியம்

ஊதியம்: மாதம் ரூ.36,900 -1,16,600 வழங்கப்படும்.
வயது வரம்பு: ஜூலை 2021-ஆம் தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளா்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 45 வயது வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

படிப்பு என்ன

படிப்பு என்ன

கல்வி தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், வீட்டு அறிவியியல், விலங்கியல், கணினியியல் போன்ற ஏதாவது ஒரு பாடங்களில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்

தேர்வு கட்டணம்

தேர்வுக் எவ்வளவு கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ரூ.500. கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை: www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

தேர்வு முறை

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

தேர்வு: மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான மூன்று மணி நேரம் கணிணி வழி எழுத்து தேர்வு நடைபெறும் . இதில், 50 சதவிகித மதிப்பெண் பெறுபவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். எஸ்சி, எஸ்சிஏ பிரிவினா் 45 சதவிகித மதிப்பெண்களும், எஸ்டி பிரிவினா் 40 சதவிகித மதிப்பெண்களும் பெற்றால் தகுதி பெற்றவர்கள் ஆவர். ஆசிரியா்கள் நியமனத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறை அரசு விதிகளின்படி பின்பற்றப்படும். தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் போதே பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.

கடைசி தேதி

கடைசி தேதி

கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 நவம்பர் 13,14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 16.09.2021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2021

English summary
Applications are invited for the Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I /Computer Instructor Grade I in School Education and other Departments for the year 2020-2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X