தமிழ்நாடு அரசின் இ-சேவை துறையில் வேலைவாய்ப்பு.. பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு இ சேவை துறையில் மாவட்ட e-District Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
தமிழ்நாடு அரசின் இ சேவை துறையில் மாவட்டங்களில் காலியாக உள்ள e-District Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

மொத்த பணியிடங்கள்: நாமக்கல் , நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 1 பணியிடங்கள் மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கல்வி தகுதி: பிஇ/ பிடெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்& என்ஜினியரிங்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) ஆகிய பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற துறைகளை எடுத்து படித்த என்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், எம்.சி.ஏ/ எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்.எஸ்.சி (ஐடி), எம்.எஸ்.சி ( சாப்ட்வேர் என்ஜினியரிங்) ஆகிய முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு: 1.08.2023 அன்று 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். http://www.tnega.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 11.09.2023 கடைசி நாளாகும். ஆன்லைன் முறையிலேயே தேர்வு கட்டணமும் செலுத்திவிட வேண்டும். 24.9.2023 அன்று தேர்வு நடைபெறும். உள்ளூர் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இருப்பிட சான்று சமர்பிப்பது அவசியம்.
தேர்வு முறை எப்படி?: விண்ணப்பங்களை பரிசீலித்த பிறகு தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக ரூ 250 செலுத்த வேண்டும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மெரிட் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications