தமிழ்நாடு மின்விநியோக கழகத்தில் வேலை.. 500 காலியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: தமிழ்நாடு மின்விநியோக கழகத்தில் (TNPDCL) பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,900 ஊதியமாக வழங்கப்படும். எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு மின் விநியோக கழகத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஊதியத்துடன் கூடிய பயிற்சி என்ற முறையில் இது, புதிதாக பட்டம் முடித்தவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பது கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு மின் விநியோக கழகத்தில் நிரப்பப்பட உள்ள பயிற்சி பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டிப்ளமோ (டெக்னிஷியன்) அப்ரெண்டீஸ் - இன்ஜினியரிங் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்க் - 435 பணியிடங்கள்
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - 35 பணியிடங்கள்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் / தகவல் தொழில்நுட்பம் - 10 பணியிடங்கள் என மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி, அது தொடர்பான படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2022, 2023, 2024, 2025 மற்றும் மே 2026 ஆகிய ஆண்டுகளில் இன்ஜினியரிங் டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
டிப்ளோமா அப்ரண்டிஸ் பணிக்கு, டிப்ளோமாவிற்கு மேலான கல்வித் தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பி.இ, பி.டெக் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை.
சம்பளம் எவ்வளவு வழங்கப்படும்?
தேர்வு செய்யப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,900 ஊதியமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க வரும் 28.11.2026 கடைசி நாளாகும். ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒரு முறைக்கு இருமுறை படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here




Click it and Unblock the Notifications
