இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவு துறையில் அசத்தல் வேலை வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!
சென்னை : தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறை சார்பில் நான்கு செயல் அலுவலர் பணியிடங்களுக்கும், கூட்டுறவுத் துறை தணிக்கைப் பிரிவில் 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கும் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை சார்பில் நான்கு செயல் அலுவலர் பணி நிரப்ப தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 ஏ பிரிவின் கீழ் உள்ள தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வமாக http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் 24 தேதிகளில் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு இந்துக்கள் மட்டும் பதிவு செய்யலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவுத் துறை தணிக்கைப் பிரிவில் 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தேர்வுகளில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு தாளும் இடம்பெற்றுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications