10 முடித்தாலே போதும்.. மாத ஊதியம் ரூ.69,000.. மத்திய உளவுத்துறையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உளவுத்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாத சம்பளம் ரூ.69 ஆயிரத்துடன் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஐபி (Inteligence Bureau)எனும் உளவுப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த உளவுப்பிரிவில் தற்போது ஏராளமான காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடங்கள் -கல்வி தகுதி என்ன?
உளவுப்பிரிவில் மொத்தம் 2 பிரிவுகளில் 1671 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Security Assistant/Executive பிரிவில் 1521 பேரும், Multi Tasking Staff/General பிரிவில் 150 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய் விரும்புவோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியை முடித்திருக்க வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு மாநிலத்தின் மொழியில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
Security Assistant/Executive பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். Multi Tasking Staff/General பணியில் சேர விரும்புவோர் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரை, ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரை வயது தளர்வு உண்டு. பிற பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி வயது தளர்வுகள் உண்டு.

சம்பளம் என்ன?
இதில் Security Assistant/Executive பிரிவில் தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.21 ஆயிரத்து 700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும். மேலும் Multi Tasking Staff/General பிரிவில் தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை கிடைக்கும். விண்ணப்பம் செய்வோருக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு ஆப்லைன் முறையில் லோக்கல் மொழியின் அறிவை அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mha.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்யும்போது உரிய ஆவணங்கள், போட்டோக்களை அப்டேட் செய்ய வேண்டும். 2022 நவம்பர் 25ம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் வழியே ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications