குழந்தை நீதி கதைகள்: நான் கேட்டது... ஆனால் எனக்கு கிடைச்சது ... மாயமாகிய ஊதா ஜாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: சுட்டி கண்மணிகளே எப்படி இருக்கீங்க, நம்ம படிக்கப்போற கதைக்கும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. உங்கள்ல எத்தனை பேரு வாழ்க்கைல இது நடந்திருக்குன்னு கமன்ட்ல சொல்லுங்க..

ஒரு காலத்தில் லண்டன் நகரின் அழகான வீதியில் ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு இருந்தது. அந்த குடியிருப்பின் ஒரு ஜன்னல் வழியாக இரு கண்கள் அந்த வீதியின் கடைகளை வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாக வைத்திருந்தது. அந்த கண்கள் அந்த கடைகளில் இருக்கும் பொருட்களை வாங்கி வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே ஏக்க பட்டுக்கொண்டிருந்தது. அது ஒரு குழந்தையின் கண்கள் தான்.

அவள் பெயர் ரோஷ்மாண்ட். அவளுக்கு ஒரு தம்பி இருந்தான். அவளது அப்பா அரசு அதிகாரியாக இருந்தார். அவள் தினமும் பள்ளி விட்டு வந்ததும் அந்த ஜன்னல் வழியாக பார்ப்பாள். ஒருநாளாவது அம்மாவுடன் சென்று இதையெல்லாம் வாங்கிவிட வேண்டும் என தீர்மானம் வைத்திருந்தால்.

Kids story in tamil : The Purple jar and Rosamand

ரோஷ்மாண்ட் .. ரோஷ்மாண்ட் சீக்கிரம் பள்ளி சீருடைகளை மாற்று, நாம் கடை வீதிக்கு செல்லவேண்டும், என்று அவளின் அம்மாவின் குரல் கேட்டது.

அடிச்சதுட நமக்கு ஜாக்பாட் என துள்ளி குதித்தாள். இதுவரை ஜன்னல் வழியாக பார்த்த பொருட்களை வாங்கலாம் என மனக்கோட்டை காட்டினாள். தயாராகி அம்மாவுடன் நடக்க ஆரம்பித்தாள். தூரத்தில் இருந்து பார்த்த கடை வீதியை ரசித்தவரே நடந்தாள்.முதலில் பொம்மை கடையை பார்த்தாள். அதிலிருந்து சில பொம்மைகளை வாங்க திட்டமிட்டிருந்தாள். அம்மாவிடம் , ' இதை நான் வாங்கிக்கொள்ளலாமா என கேட்டாள் .

இல்லை ரோஸ்மாண்ட் இது உனக்கு பயன்படாது என்றார், அம்மா. அவள் சோகமாக நடக்க ஆரம்பித்தாள். தொப்பிகள் நிறைந்த கடைகளை பார்த்தால், அம்மா.. அம்மா இதை வாங்கி தரீங்களா என்றாள். இல்லை ரோஸ்மாண்ட் இதை நீ எல்லா நேரங்களிலும் பயன்படுத்தமாட்டாய் என்றார். அவளும் சோகமாக அங்கிருந்து நடந்தாள்.

பளபளவென மின்னும் ரிப்பன்களை கண்டதும் துள்ளினாள் அம்மா கண்டிப்பாக வாங்கி தருவார் என்று எண்ணி அம்மா இவை மிகவும் அழகாக இருக்கிறதல்லவா என்றாள். அம்மாவும் ஆமாம் என் செல்லமே என்று சொல்லிக்கொண்டே அந்த கடையை கடந்தார். ரோஸ்மாண்ட் மனக்கோட்டையெல்லாம் ஒவ்வொன்றாக தகர்ந்து கொண்டே போனது.

அழகான நகைக்கடைக்கு அருகில் நடந்தனர். அம்மா நாம் கண்டிப்பாக இங்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றாள் ரோஸ்மாண்ட். அம்மா இல்லை மகளே இவை வாங்குவதற்கான எந்த விழாக்களும் இப்பொது வரவில்லை, என்றார். அவர்கள் நடந்தவாரே ஒரு மெடிக்கல் கடைக்குள் நுழைந்தனர். அம்மா சில வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். அங்கு அழகான ஊதா கலர் ஜாடியை பார்த்தாள் ரோஸ்மாண்ட். அம்மா அம்மா அது மிகவும் அழகாக இருக்கிறது அதை வாங்கி தாருங்கள் என அடம் பிடித்தாள்.

அம்மாவோ, அதை வைத்து நீ என்ன செய்வாய் என கேட்டார். அது உனக்கு உதவாது மகளே என்று வெளியே நடக்க ஆரம்பித்தார். நாம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்க வேண்டும் , ஆகையால் அந்த கடைக்கு செல்லலாம் என் அன்பு மகளே என்றார், அம்மா. ரோஸ்மாண்ட், அம்மா எனக்கு அந்த ஜாடி மிகவும் பிடித்திருந்தது. ஏன் அதை வாங்கி தர மாட்டேன் என்கிறீர்கள். நீங்கள் பணம் ஏதும் எடுத்து வரவில்லையா?, நான் ஆசையா கேட்கிறேன் எதுவும் வாங்கி தர மாட்டேன் என்கிறீர்கள். என்று வேதனையில் பொங்கினாள்.

நான் பணம் எடுத்து வந்தேன் , ஆனால் நீ உனக்கு தேவையான பொருளாய் வாங்கிகோ, பயன்படாத பொருட்களை வாங்குவதால் பணவிரயம் தான் ஆகும் என்றார் அம்மா. ஆனால் அம்மா அந்த ஜாடியில் நான் பூக்களை வைத்து கொள்வேன் , அலங்கரிப்பேன் என்றாள். அம்மாவும் சரி யோசிப்போம் என்று காய்கறி வாங்க நடந்தார். சட்டென ரோஸ்மாண்ட் காலில் ஏதோ குத்தியது போல் உணர்ந்தாள்.

அவளின் காலணி அடியில் பெரிய ஓட்டை இருப்பதை பார்த்தாள். அம்மாவிடம் காட்டினாள். அம்மாவோ சரி உனக்கு முதலில் காலணிகள் வாங்கலாம் என்றார். இருவரும் செருப்பு கடைக்கு சென்றார்கள். கடைக்காரர், வாங்கம்மா என்ன வேண்டும் , யாருக்கு சூ பார்க்கிறீர்கள் என்றார். ரோஸ்மாண்ட் அம்மா , என் மகளுக்குத்தான் என்றார். அவர் அவளுக்கு தகுந்த அளவில் சூ எடுத்து கொடுத்தார். ஆனால் அவளுக்கு அந்த ஜாடியின் மேல் தான் ஆசை இருந்தது. அந்த கடைக்குள் சென்றதும் நாற்றம் வீசியது. அம்மா அம்மா இந்த கடைக்குள் நிக்கவே முடியவில்லை , கெட்ட வாசனை வருகிறது என்றாள் ரோஸ்மாண்ட். அது தோலினால் செய்த காலணிகள் உனக்கு இவை பொருத்தமாக இருக்கும் என்றார் அம்மா.

Kids story in tamil : The Purple jar and Rosamand

அம்மா , எனக்கு இந்த சூ பிடிக்கவில்லை , அந்த ஊதா ஜாடி தான் வேண்டும் என்றாள். ரோஸ்மாண்ட் சூ உனக்கு தேவையான ஒன்று, இப்பொழுது நீ அணிந்திருப்பது பழுதாகிவிட்டது. என்னிடம் இதில் ஏதாவது ஒன்று வாங்குவதற்கு தான் பணம் இருக்கிறது எது வாங்க வேண்டும் என நீயே முடிவு செய்துகொள் என்றார் அம்மா.

அவள் யோசித்து பார்த்தாள் . அம்மா இது எனக்கு மிகவும் பிடித்த செருப்பு , ரொம்ப நாட்களாக வைத்திருக்கிறேன் ஆனால் அந்த ஊதா கலர் ஜாடி நான் ஆசை பட்ட ஒன்று எனவே அதுதான் வேண்டும் என்றாள். அம்மா சொன்னார், சரி அப்படியென்றால் அதுவே வாங்கி தருகிறேன் , ஆனால் ஒரு மாத இடைவெளியில் உனக்கு புது காலணிகள் வாங்கி தர மாட்டேன். உன் முடிவு தான் யோசித்து சொல் என்றார். அவள் ஜாடி கிடைக்கும் என்ற ஆசையில் தலைகால் புரியாமல் ஜாடி கிடைக்க போகிறது என குதித்தாள்.

அம்மாவும் மகளும் அந்த மெடிக்கல் கடைக்கு நடந்தனர். ரோஸ்மாண்டால் நடக்க முடியவில்லை. அவள் காலணிகள் அவளுக்கு வலியை கொடுத்தது. கடைக்கு சென்று ஜாடியை வாங்கியதும் அவளுக்கு சந்தோசம் தாங்கவில்லை. வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தனர். அவள் அந்த கண்ணாடி ஜாடியை பத்திரமாக எடுத்து கொண்டு நடந்தாள். அந்த ஊதா கலர் அவள் கண்களை பறித்தது. அந்த வீதியில் இருந்த கற்களை கவனிக்காமல் நடந்தாள் அதன் கூர்மையான பகுதி அவள் காலை பதம் பார்த்தது.

அவள் அம்மா வலிக்குது என்று கத்தினாள். இதற்காகத்தான் அப்போதே சொன்னேன், உனக்கு வலிக்குது என்றாள் இந்த கண்ணாடி ஜாடியை கொடுத்து விட்டு சூ வாங்கி கொள்ளலாம் என்றார் அம்மா. ரோஸ்மாண்ட் இல்லை இல்லை அம்மா எனக்கு இதுதான் வேண்டும், என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியும், நீங்கள் கூறியதுபோல் ஒரு மாதம் கழித்தே வாங்கி கொள்கிறேன் என்றாள்.

வீட்டிற்கு சென்றதும் ஜாடியை திறந்தாள் ஒரு கெட்ட வாசனை வந்தது. ஓடி சென்று அம்மா அம்மா இது நாத்தம் அடிக்கிறது, இதை எப்படி பூச்செண்டு வைக்க முடியும் என்றாள். அம்மா, அப்படியா அதை தண்ணீர் ஊற்றி கழுவினால் நாத்தம் பொய் விடும் என்றார். அவளும் வாஷ்பேஷனில் அந்த கண்ணாடி ஜாடியில் இருந்த திரவத்தை ஊற்றினாள். அந்த திரவம் தான் ஊதா கலர் தவிர ஜாடி வெறும் வெள்ளை நிற கண்ணாடி என்பதை உணர்ந்தாள். அவள் அனாவசியமான ஒன்றை வாங்கி பணத்தையும் வீணடித்தால், அவளுக்கு தேவையான சூ வாங்க முடியாமல் போனது.

அடுத்த நாள் அவளது தந்தை நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைப்பு வந்துள்ளது, அனைவரும் தயாராகுங்கள் என்றார். ரோஸ்மாண்ட் அப்பா சூ வை மட்டும் பார்த்து விட கூடாது என எண்ணினாள். அது மிகவும் மோசமானதாக இருந்தது. ஆனால் அவள் நினைத்தவாறு நடக்கவில்லை. அவள் தந்தை அதை பார்த்துவிட்டார். இப்படி ஒரு நிகழ்வுக்கு போக முடியாது ஆகையால் நீ வீட்டில் இரு என்றார் அப்பா. ரோஸ்மாண்ட் மட்டும் தனியாக இருந்தாள். மிகவும் வருந்தினாள். அம்மா அத்தனை முறை எடுத்து சொல்லியும் நாம் சிந்திக்காமல் இருந்துவிட்டோமே என யோசித்தாள். மூவரும் அவளை விட்டுட்டுவிட்டு அரசு நிகழ்வுக்கு சென்று வந்தனர்.

மறுநாள் காலை ரோஸ்மாண்ட் சோகமாக இருப்பதை பார்த்த அம்மா , அன்பு மகளே என்னவாயிற்று , என்றார். அம்மா நாளை அத்தை மகளுக்கு பிறந்த நாள் விழா இருக்கிறதல்லவா , என்னிடம் நல்ல காலனி வேறு இல்லை, உங்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் வாங்கித்தருமாறு கேட்க மாட்டேன் என்றும் , என்ன செய்வதென்று தெரிய வில்லை என்றாள் வருத்தமாக. அம்மா அவளிடம் ஒரு பாக்ஸை நீட்டினார். திறந்து பார்த்தாள் ரோஸ்மாண்ட். அவளுக்கு ஆச்சர்யம் தங்க முடியவில்லை. அதன் உள்ளே அழகான சூ இருந்தது. ஆனால் அம்மா நான் உங்களுக்கு வாக்கு கொடுத்தேன் அல்லவா, நீங்கள் எனக்கு காலணிகளை பரிசாக அளித்துள்ளீர்கள் என்றாள்.

ஆமாம் என் அன்பு மகளே, நீ கூறியது சரிதான் நீதான் வாக்கு குடுத்தாயே தவிர நான் கொடுக்கவில்லை . எந்த இடத்திலும் நான் வாங்கி தரமாட்டேன் என சொல்லவில்லையே, மேலும் நீ கொடுத்த வாக்கை காப்பாற்றி இருக்கிறாய். நீ எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்துள்ளாய் எனவே அதற்காகத்தான் இந்த அன்பு பரிசு என்றார். ரோஸ்மாண்ட் அதை போட்டு பார்த்து ஆனந்தம் அடைந்தாள்.

இதைபோல் குட்டிஸ் உங்களுக்கும் நிறைய பொம்மைகள் வாங்க வேண்டும், அது, இது என பார்க்கும் அனைத்தும் வாங்க ஆசைகள் வரலாம். ஆனால் உங்களுக்கு எது அந்த சமயத்தில் வேண்டும் என்பதை நீங்கள் தான் நிதானமாக முடிவு செய்து வாங்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+