கறை படிந்த வேட்டிகளுக்கு மாற்றாய் ஜீன்ஸ் பேன்டைப் பார்ப்பது அருமையாகவே உள்ளது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் களப்பணி மேற்கொண்டதற்கு அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் கமல் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் சென்னை துறைமுகம் பகுதியில் இன்று பார்வையிட்டார். நேற்று துறைமுகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கழிவுகளால் வட சென்னைக்கு ஆபத்து என டிவிட்டரில் எச்சரித்த கமல் இன்று நேரடியாக அந்த பகுதியை பார்வைட்டதற் அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தனக்கு பாராட்டு தெரிவித்த திருமாவளவன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிக்கும் கமல் நன்றி தெரிவித்தார். மேலும் அவர்களது பாராட்டு தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் டிவிட்டரில் கூறியிருந்தார். இதற்கும் வரவேற்பு கமல் ரசிகர்கள் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

போயினே இரு தல

தல.... நீ எவனையும் கண்டுக்காம உன் ஸ்பீடுக்கு போயினே இரு தல.. என்கிறது இந்த டிவிட்..

ஜீன்ஸ் ஃபேன்ட்

கறை படிந்த வேட்டிகளுக்கு மாற்றாய் இந்த ஜீன் ஃபேன்டைப் பார்ப்பது அருமையாகவே உள்ளது... என்கிறார் இந்த நெட்டிசன்

வேகம் பிரமிப்பூட்டுகிறது

விரைவில் சந்திப்போம் என்று நேற்றுதான் அறிவித்தீர்கள். அதை இன்றே நடைமுறைப்படுத்திய உங்கள் வேகம் பிரமிப்பூட்டுகிறது தலைவா. வாருங்கள்... என கூறுகிறார் இந்த வலைஞர்

களத்தில் இனிதே ஆரம்பம்

இங்கே சிலபேரின் வாயடைக்க இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்..

ஆண்டவர் ஆட்டம் 'களத்தில்' இனிதே ஆரம்பம்... என்கிறது இந்த டிவிட்

இரு கரங்களால் வரவேற்கிறோம்

மக்கள் வாழ்க்கை முன்னேற்றம், ஊழல் அற்ற அரசு, வேலை வாய்ப்பற்ற இளைஞர் வலுப்பெற மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றால் இரு கரங்களால் வரவேற்கிறோம்... என்று கூறுகிறது இந்த டிவிட்

ஊக்கத்தோடு களம் காண்க

ஊக்கத்தோடு களம் கண்டு வெற்றிவாகையும் சூடுக.. என வாழ்த்துகிறார் இந்த வலைஞர்

நல் தொடக்கம் வாருங்கள்

இந்த துணிவு சாதாரணமானது அல்ல நல் தொடக்கம் வாருங்கள் கைகோர்ப்போம்... என்கிறது இந்த டிவிட்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal visted the Ennur Port area today early morning. His fans welcoms his action in the filled and calling to come to politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற